Mobile Number பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது.
ஆதார் திருத்தம் : ஆதார் எண் ஒரு தனி நபர் அடையாளம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவையும் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. ஆதார் இவ்வளவு முக்கியமான ஆவணமாக இருப்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிக சரியாக இருக்க வேண்டியதும் கட்டாயமாகும். அதுமட்டுமன்றி ஆதார் கார்டு பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. அந்த வகையில் ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் கார்டு இணைக்கப்படலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதார் கார்டில் திருத்தங்கள், தகவல்களை புதுப்பிப்பது, ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது ஆகியவற்றுக்கு ஓடிபி கட்டாயமாகும். இதன் காரணமாகவே ஆதார் கார்டுடன் மொபைல் எண் இணைக்கப்படுகிறது.
ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்?
ஆதார் சேவைகளை பெற ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இந்த சூழலில் ஒவ்வொரு ஆதார் எண்ணுக்கும், ஒவ்வொரு தனி மொபைல் எண் கொடுக்கப்பட வேண்டுமா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டை ஒரே மொபைல் எண்ணில் இணைக்க முடியும். ஒரே மொபைல் எண்ணுடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மொபைல் எண்ணை ஏன் ஆதாருடன் இணைக்க வேண்டும்?
மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதன் மூலம், ஓடிபியை பயன்படுத்தி ஆதார் சேவைகளை பெற முடியும்.
ஆன்லைன் சேவைகளுக்குத் தேவையான ஓடிபிகளை பெறுவதற்கு கண்டிப்பாக மொபைல் எண் தேவை.
எனவே தான் அனைத்து ஆதர் கார்டுகளுடனும் மொபைல் எண் இணைக்கப்பட வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் மீண்டு வலியுறுத்து வருகிறது. ஒருவேளை ஆதார் கார்டு வைத்திருப்பவரிடம் மொபைல் எண் இல்லையென்றால், அவர் தனது குடும்ப உறுப்பினரின் மொபைல் எண்ணை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப உறுப்பினர்கள் ஒரே மொபைல் எண்ணை ஆதாருக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. உதாரணமாக, ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் சேவையை பயன்படுத்த முயற்சித்தால் அது சிக்கலாகிவிடும்.