Homeதொழில்நுட்பம்ஆதார் கார்டு போட்டோவை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க.

ஆதார் கார்டு போட்டோவை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க.

Aadhaar Card Photo Update: ஒருவர் தனது ஆதார் கார்டில் கருவிழி, கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ரூ. 100 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இது தங்களின் புகைப்படத்தை ஆதாரில் மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு தீர்வாக அமையும்.

ஆதார் கார்டில் புகைப்படம் புதுப்பிப்பு: இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணான ஆதார் அட்டையை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளம் தெரிவித்துள்ளது. ஆதார் ஆவணங்களை ஆன்லைனில் புதுப்பிக்க அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்களைப் பதிவேற்றுவது அவசியம், இதற்கு பொதுவாக ஆதார் மையங்களில் ரூ.50 செலவாகும். பயனர்கள் தங்களின் மக்கள்தொகை தகவல்களை, குறிப்பாக ஆதார் அட்டை பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தால் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், கருவிழி, கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க, ரூ. 100 கட்டணம் மற்றும் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.

இதற்கிடையில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களின் படங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை என்பதால் அவ்வாறு மனதுக்கு தோன்றலாம். இந்த நிலையில், மக்கள் தங்கள் படங்களை மாற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் இதோ.
முதலில், யு.ஐ.டி.ஏ.ஐ -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கவும். பிரிண்ட் எடுத்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்கு சென்று ஆதார் நிர்வாகியிடம் ஆதார் பதிவு படிவத்தை சமர்ப்பிக்கவும். மேலும், உங்கள் பயோமெட்ரிக் தகவலை வழங்கவும்.

அங்கு உங்கள் படத்தை சென்டரில் உள்ள நபர் கிளிக் செய்வார். விவரங்களைப் புதுப்பிக்க, கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆதார் கார்டின் நிலையைக் கண்காணிக்கப் பயன்படும் யுஆர்என்-ஐ உள்ளடக்கிய ஒப்புகை சீட்டைப் பெறுவீர்கள். சில நாட்களுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை தயாரானதும், ‘மை ஆதார்’ என்பதன் கீழ் யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

‘டவுன்லோடு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு, புதுப்பிக்கப்பட்ட மின்-ஆதார் அட்டையை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கவும். இறுதியாக, ஆதார் அட்டையின் பிரிண்ட் அவுட் எடுக்கவும் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை. பதிவு மையத்தில் புகைப்படங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டாம். பொதுவாக, ஆதார் அட்டையில் தகவல்களைப் புதுப்பிக்க 30 நாள்கள் வரை ஆகும். இருப்பினும், இது சில நேரங்களில் 90 நாள்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்