Air Conditioner | வெயில் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், முழு நேரமும் ஏசி ஓடிக்கொண்டே தான் இருக்கும். வெயில் காலம் மட்டுமன்றி குளிர் காலங்களிலும் பொதுமக்கள் ஏசியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு தொடர்ந்து ஏசி ஓடுவதால் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
மின்சார கட்டணம் : முன்பெல்லாம் ஒரு சில வீடுகளில் மட்டுமே ஏசி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து வீடுகளிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. வெயில் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், முழு நேரமும் ஏசி ஓடிக்கொண்டே தான் இருக்கும். வெயில் காலம் மட்டுமன்றி குளிர் காலங்களிலும் பொதுமக்கள் ஏசியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு தொடர்ந்து ஏசி ஓடுவதால் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே குறைந்த மின்சார கட்டணம் வரும் வகையில் ஏசியை பயன்படுத்துவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
வெப்பநிலையை குறைவாக வைக்க வேண்டாம்
ஏசியின் வெப்ப நிலையை குறைவாக வைக்க வேண்டாம். ஏசியின் வெப்ப நிலையை குறைவாக வைத்தால், மின்சார கட்டணம் குறைவாக வரும் என பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஏசியை எவ்வளவு குறைவாக வைக்கிறோமோ அவ்வளவு அதிக மின் கட்டணம் வரும். ஏசியின் வெப்ப நிலையை 26 அல்லது 27-ல் பராமரிப்பது சரியானதாக இருக்கும். இவ்வாறு செய்யும்போது ஏசியில், கம்பரசரின் அழுத்தம் குறையும். இதன் காரணமாக மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
டைமர் செட் செய்யுங்கள்
ஏசியை போடும்போது எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அதே அளவு கவனம் ஏசியை ஆஃப் செய்வதிலும் இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான மக்கள் ஏசியை ஆஃப் செய்வதில்லை. ஏசியை ஆன் செய்துவிட்டு தங்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் ஏசியை ஆஃப் செய்யாமலே சென்று விடுகின்றனர். இதன் காரணமாக நாள் முழுவது ஏசி ஓடுகிறது. இதை தடுக்க உங்கள் ஏசியில் டைமர் செட் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏசியை ஆஃப் செய்ய மறந்துவிட்டாலும் உங்களுக்கு மின்சார கட்டணம் உயராது.
ஏசி சர்வீஸ் கட்டாயம்
ஏசியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை உரிய நேரத்தில் சர்வீஸ் செய்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் ஏசியை உடனுக்குடன் சர்வீஸ் செய்வதன் மூலம், ஏசியில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகள் நீங்கி செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக மின்சார நுகர்வும் மிக குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீலிங் ஃபேன்களை ஆஃப் செய்ய வேண்டாம்
ஏசி ஓடும்போது பலரும் சீலிங் ஃபேன்களை ஆஃப் செய்து விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது அறை குளிர்ச்சியாக நீண்ட நேரம் எடுக்கும். இதனால் ஏசியின் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே ஏசியை ஆன் செய்யும்போது சீலிங் ஃபேனையும் ஆன் செய்யுங்கள். இது உங்களது அறையை விரைவாக குளிர்ச்சியாக்கும். இதன் மூலம் நீண்ட நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் மின்சார கட்டணம் அதிகரிப்பத்தை தடுக்கலாம்.