Homeதொழில்நுட்பம்இலவசமாக ஆப்பிள் ஏர்பாட் வாங்கணுமா? இதோ தீபாவளி தள்ளுபடி.

இலவசமாக ஆப்பிள் ஏர்பாட் வாங்கணுமா? இதோ தீபாவளி தள்ளுபடி.

Special Offer இன்று தொடங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அதிரடி ஆஃபர், 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவசமாக ஏர்பாட் வாங்க நினைக்கும் நபர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஆப்பிள் ஸ்டோர்களுக்கும் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் விழாக்கால சலுகையை அறிவித்துள்ளது. இதில் ரூ.6,900 மதிப்பிலான ஏர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தீபாவளி சலுகையில் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன் வாங்கினால் Beats Solo Buds ஏர்பாட் இலவசமாக வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆப்பிளின் இந்த இலவச ஏர்பாடை ஐபோன் 15 உடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அதிரடி ஆஃபர், 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவசமாக ஏர்பாட் வாங்க நினைக்கும் நபர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஆப்பிள் ஸ்டோர்களுக்கும் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் 15 வாங்குவதற்கு 12 மாதங்களுக்கான No Cost EMI வழங்குவதுடன், வங்கி சலுகை மற்றும் பழைய போன்களை எக்ஸ்சேஞ் செய்வதற்கான பணம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பழைய போன்களுக்கு ரூ.67,500 வரை வழங்கப்ப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த Beats Solo Buds 18 மணி நேரம் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இது மேட் பிளாக், ஸ்டார்ம் கிரே, ஆர்க்டிக் பர்பிள் மற்றும் டிரான்ஸ்பேரன் ரெட் ஆகிய அசத்தலான நிறங்களில் விற்பனை செய்யபப்டுகிறது. இந்த ஏர்பாடின் விலை ரூ.6,900 ஆக உள்ள நிலையில், தீபாவளி சலுகையாக இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்