Homeதொழில்நுட்பம்வெறும் 100 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்.

வெறும் 100 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்.

சமீபத்தில் நாட்டில் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதோடு இல்லாமல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களும் சுமார் 26 சதவீதம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ள நிலையில், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு பிளான்களை அறிமுகம் செய்தும் குறைத்தும் வருகிறது.

பிஎஸ்என்எல்: நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. சமீபத்தில் நாட்டில் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதோடு இல்லாமல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களும் சுமார் 26 சதவீதம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ள நிலையில், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு பிளான்களை அறிமுகம் செய்தும் குறைத்தும் வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகின்றன. சமீபத்திய ஆய்வின் படி பெரும்பாலான மக்கள் தங்கம் மொபைல் எண்ணை பிற நொட்வொர்குகளில் கிருந்து BSNL-க்கு மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலையில், பல்வேறு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியும் குறைத்தும் வரும் நிலையில், ஒரு மாத ப்ளான் திட்டம் என்ன என்பதை பார்ப்போம்.

ஒரு மாத ரீசார்ஜ் பிளான்:
BSNL மிகவும் சிக்கனமான 30 நாள் ரீசார்ஜ். திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.199 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாதம் முழுவதும் 60ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ரூ.108 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாதம் முழுவதும் 28ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களிடம் 100 ரூபாய் இருந்தாலே BSNL-லில் ரீசார்ஜ் செய்து ஒருமாதம் கவலையில்லாமல் இருக்கலாம்.

ஜியோ, ஏர்டெல் எப்படி?
ஜியோவில் ரூ.249 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.299 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.349 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாதம் முழுவதும் 56ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல, ஏர்டலில் ரூ.249 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.299 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்