Homeதொழில்நுட்பம்வெறும் 49 ரூபாய் இருந்தால் போதும் bsnl இல் ஓடிடி ரீசார்ஜ் செய்யலாம்.

வெறும் 49 ரூபாய் இருந்தால் போதும் bsnl இல் ஓடிடி ரீசார்ஜ் செய்யலாம்.

BSNL Recharge plan benefits | சமீபத்திய ஆய்வின் படி பெரும்பாலான மக்கள் தங்கம் மொபைல் எண்ணை பிற நொட்வொர்குகளில் கிருந்து BSNL-க்கு மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில், BSNL அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி தளங்களை பயன்படுத்துவதற்கான சலுகைகளையும் வழங்குகிறது.

BSNL-ன் புதிய பிளான் : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ப்ரீ பெய்டு மற்றும் போஸ் பெய்ட் பிளான்களில் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை BSNL மற்றும் ஏர்டெல்லுக்கு மாற்றம் செய்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வின் படி பெரும்பாலான மக்கள் தங்கம் மொபைல் எண்ணை பிற நொட்வொர்குகளில் கிருந்து BSNL-க்கு மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில், BSNL அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி தளங்களை பயன்படுத்துவதற்கான சலுகைகளையும் வழங்குகிறது.

ZEE5, SonyLIV, YuppTV, Disney + Hotstar, Hungama உள்ளிட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களை ஒரே பிளானில் வழங்க BSNL திட்டமிட்டுள்ளது. பிளான்களுக்கு ஏற்ப ஒடிடி பிளாட்ஃபார்ம்களை தேர்வு செய்யும் வசதியையும் BSNL வழங்குகிறது. இந்த ரீச்சார்ஜ் பிளான்கள் ரூ.49 முதல் ரூ.250 வரை வழங்கபப்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டத்திற்கு, BSNL சினிமா பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

BSNL சினிமா பிளஸ்-ன் சிறப்பு அம்சங்கள் என்ன?
இது ஒரே பிளானில் பல்வேறு ஓடிடி தளங்களுக்கு Subscribtion வழங்குகிறது.
இந்த சலுகைகளை பயனர்கள் எந்த நேரம் வேண்டுமாலானும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எந்த சாதனங்களில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிளான் மூலம் ZEE5, SonyLIV, YuppTV, Disney + Hotstar, Hungama உள்ளிட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களை பார்க்கலாம்.
BSNL சினிமா பிளஸ் குறித்த கூடுதல் விவரங்கள்
ரூ.49-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான்

இத பிளானின் விலை ரூ.49 ஆகும்.
இதில் Shemaroo, Hungama, Lionsgate and EPIC ஓடிடி தளங்களை பார்க்கலாம்.
ரூ.119-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான்

இந்த பிளானின் விலை ரூ.119 ஆகும்.
இதில் ZEE5 Premium, SonyLIV Premium, YuppTV மற்றும் Disney+Hotsar ஓடிடி தளங்களை பார்க்கலாம்.
ரூ.249-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான்

இந்த பிளானின் விலை ரூ.249 ஆகும்.
இதில் ZEE5 Premium, SonyLIV Premium, YuppTV, Shemaroo, Hungama மற்றும் Disney+Hotsar உள்ளிட்ட ஓடிடி தளங்களை பார்க்கலாம்.
இதையும் படிங்க : Microsoft Windows : விண்டோஸ் திடீர்னு ஏன் முடங்கியது? காரணம் இதுதான்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்வு நிறுவனங்கள் விலையேற்றியதன் அதிர்ச்சியில் உள்ள மக்களை BSNL-ன் இந்த புதிய பிளான் நிம்மதியடைய செய்துள்ளது. ஏற்கனவே ஏராளமான பயனர்கள் BSNL நோக்கி படையெடுக்கும் நிலையில், இந்த புதிய மாற்றம் காரணமாக பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சற்று முன்