Homeதொழில்நுட்பம்மின்கட்டணம் குறைவாக வர வேண்டும் என்று நினைத்தால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

மின்கட்டணம் குறைவாக வர வேண்டும் என்று நினைத்தால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

Electricity Bill | தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்சார கட்டணம் : தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மின்சார கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள இந்த நிலையில், உங்கள் மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்க கூடிய டிப்ஸ்களை நாங்கள் தருகிறோம்.

மின்சார கட்டணம் பாதியாக குறைய என்ன செய்ய வேண்டும்?
உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு 3 முக்கிய டிப்ஸ்களை கடைபிடிப்பதன் மூலம் உங்களால் எளிதாக மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.

எல்இடி பல்புகளை பயன்படுத்துங்கள்
பெரும்பாலான வீடுகளில் டியூப் லைட் பயன்படுத்தப்படுகிறது. காரணம் டியூப் லைட் அதிக வெளிச்சம் தரக்கூடியது என்பதால் தான். ஆனால் டியூப் லைட் பயன்படுத்துவது உங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தும் வழியாகும். எனவே வீட்டில் டியூப் லைட் பயன்படுத்துவதற்கு பதிலாக எல்இடி பல்புகளை பயன்படுத்துங்கள் . 2 முதல் 40 வாட்ஸ் வரையிலான எல்இடி பல்புகள் சந்தையில் கிடைக்கின்றன. டியூப் லைட்டுகளுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்களால் வீட்டின் மின்சார கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும்.

இன்வெர்ட்டர் ஏசி பயன்படுத்துங்கள்
தற்போது அனைவரது வீட்டிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. வெயில் காலம் மட்டுமன்றி மழை, குளிர் என அனைத்து காலநிலையிலும் மக்கள் ஏசியை பயன்படுத்துகின்றனர். உங்கள் வீட்டில் மின்சார கட்டணம் உயர்வாக இருக்க ஏசியும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே உங்கள் வீட்டில் வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்கு பதிலாக இன்வெர்ட்டர் ஏசியை பொருத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

BLDC மின்விசிரியை பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டில் பழைய மின்விசிரிகள் இருந்தால் அவற்றை மாற்றிவிடுங்கள். ஏனெனில் அவை 100 முதல் 140 வாட்ஸ் திறன் கொண்டவை. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மின்சார கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது சந்தையில் BLDC மின்விசிரிகள் கிடைகின்றன. அவை வெறும் 40 வாட்ஸ் திறன் கொண்டவை. இவை மின்சார பயன்பாட்டை குறைத்து மின் கட்டணத்தையும் குறைக்க உதவி செய்யும்.

சற்று முன்