Homeதொழில்நுட்பம்கூடிய சீக்கிரம் ஏலியனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நாசாவும் ஐரோப்பிய விண்வெளி கழகமும் இணைந்து செய்யும்...

கூடிய சீக்கிரம் ஏலியனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நாசாவும் ஐரோப்பிய விண்வெளி கழகமும் இணைந்து செய்யும் ஆராய்ச்சி

கொரோனா பெருந்தொற்று, இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மரணம், ட்வீட்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள், உக்ரைன் – ரஷ்யா போர் என பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததால் பெரும் பிரபலமானார் ஏதோஸ் சலோமி. ஏற்கனவே நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா போன்றோரின் கணிப்புகள் மனித குலத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் நிஜமாகி வருகின்றன. அவர்களை போன்றே ஏதோஸ் சலோமியும் கணிப்புகளும் பலித்து வருவதால், மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதர்கள் சந்திக்க போகும் மாற்றங்கள் குறித்து கணித்துள்ளார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஆண்டுகளில் அறிவியல் தொடர்பிலான அரிய கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும், அவை மனித வாழ்வையும் நாகரீகத்தையும் மாற்றும் என்றும் ஏதோஸ் சலோமி தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி 2026 – 2028 இடையே நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியும் இணைந்து ஏலியன்கள் குறித்த விஷயங்களை கண்டுபிடிக்கும் என்றும் அது அறிவியல் வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ் சலோமி.

ஜூபிடரின் சந்திரன்களில் ஒன்றில் அறிவியலாளர்கள் மிகவும் வித்தியாசமான நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறும் அவர், இதற்கு முன் அப்படிப்பட்ட உயிரினங்களை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்கிறார்.

இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகத்தையே மாற்றக்கூடும் என்றும், உயிரின் தோற்றம் குறித்த கொள்கைகளை மீளாய்வு செய்யவைக்கக்கூடும் என்றும், இதுவரை இல்லாத வகையில் பலவித கண்டுபிடிப்புகளையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் செய்ய இருக்கிறார்கள், அவை வரலாற்றையே மீளாய்வு செய்யத் தூண்டும் என்றும் அடுக்கிக்கொண்டே செல்கிறார் ஏதோஸ்.

சற்று முன்