Homeதொழில்நுட்பம்ககன்யான் சோதனை நிறுத்தம்.

ககன்யான் சோதனை நிறுத்தம்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ள நிலையில், அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ.

அந்த வகையில் ககன்யான் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருந்தது. விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமியில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட முக்கிய சோதனை ஓட்டம் வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும் என்றும் இதற்கான கவுன்டவுனில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்தது. ஆனால் ககன்யான் திட்டத்தின் விண்கல சோதனைக்கான கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு சோதனை விண்கலன் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ககன்யான் திட்ட மாதிரி விண்கலனை விண்ணில் ஏவும் சோதனை இன்று இல்லை; திட்டமிட்ட 5 விநாடிகளுக்கு முன்னதாக ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டியளித்துள்ளார்.

சற்று முன்