Homeதொழில்நுட்பம்பிளாஸ்டிக்கில் கேமராவை வைத்து, செராமிக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் அசத்தலான கூகுள் பிக்சல் 7a ஃபோன் அறிமுகம்.

பிளாஸ்டிக்கில் கேமராவை வைத்து, செராமிக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் அசத்தலான கூகுள் பிக்சல் 7a ஃபோன் அறிமுகம்.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கூகுள், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை கூகுள் பிக்சல், பிக்சல் 2, பிக்சல் 3, பிக்சல் 4, பிக்சல் 5, பிக்சல் 5a, பிக்சல் 6a, பிக்சல் 7 உள்ளிட்ட ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும் எனவும், முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. . ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் “Lynx” எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் ஸ்மார்ட்போன் சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிலும் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் செராமிக் பாடி கொண்டிருக்கும் என தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் செராமிக் பாடி கொண்ட முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பிக்சல் 7a பெறும்.மேலும் பிளாக்‌ஷிப் கேமரா சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

சற்று முன்