Homeதொழில்நுட்பம்உங்க மொபைல் நம்பரை பிஎஸ்என்எல் க்கு மாற்ற விரும்புகிறீர்களா?

உங்க மொபைல் நம்பரை பிஎஸ்என்எல் க்கு மாற்ற விரும்புகிறீர்களா?

How to change network சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள மக்கள் BSNL சேவைக்கு தங்களது மொபைல் எண்ணை மாற்றம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். காரணம் BSNL விலை ஏற்றம் செய்யவில்லை.

கட்டண உயர்வு : ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியுள்ளன. அதன்படி, ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாஃபோன் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது ரீசார் பிளானின் விலையை உயர்த்தியதுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எனவே குறைந்த கட்டணங்களுடன் கூடிய தொலைத்தொடர்புகளை தேர்ந்தெடுப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் தொலைதொடர்பு நிறுவன்னக்கள் கட்டணங்களை உயர்த்திய நிலையில், அரசின் தொலைதொடர்பு நிறுவனமான BSNL தனது ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை மாற்றமல் உள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை BSNL தொலைதொடர்புக்கு மாற்ற திட்டமிட்டு வருவகின்றனர்.

இந்நிலையில் பலரும் தங்கள் மொபைல் எண்ணை எப்படி BSNL தொலைதொடர்புக்கு மாற்றுவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். எனவே உங்கள் மொபைல் எண்ணை BSNL தொலைதொடர்புக்கு எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் சொல்கிறோம்.

மொபைல் எண்ணை BSNL தொலைதொடர்புக்கு மாற்றுவது எப்படி?
உங்கள் மொபைல் போனில், மெசேஜ் அப்ளிகேஷனை திறந்து PORT என டைப் செய்யுங்கள்.
அதற்கு சற்று இடைவெளி விட்டு உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள்.
பிறகு டைப் செய்த அந்த மெசேஜை 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
இதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு UPC (Unique Porting Code) கோட் அனுப்பப்படும்.
மொபைல் எண் BSNL தொலைதொடர்புக்கு மாற்றப்படும் வரை அல்லது குறுஞ்செய்தி வந்த அடுத்த 15 நாட்களுக்கு இந்த UPC கோட் செல்லுபடியாகும்.
நீங்கள் ஒருவேளை ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றால் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பதிலாக போன் செய்ய வேண்டும்.
பயனர்கள் தங்களுக்கு UPC ஐடி கிடைத்தவுடன் அருகிலிருக்கும் BSNL வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, சிம் கார்டை மற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கோரிக்கையை சமர்பிக்கலாம்.

சற்று முன்