New Update: பலரும் பயன்படுத்தக்க்கூடிய இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் தற்போது ஒரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் : தற்போது மக்களிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பயன்பாடு முதல் இடம் வகிக்கிறது. பொழுது போக்கிற்கு மட்டுமன்றி, ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதால் மக்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் உள்ளனர். அதுமட்டுமன்றி பொதுமக்கள் அதிகம் ஆக்டிவாக இருக்க கூடிய சமூக ஊடகங்களில் இதுவும் ஒன்று. பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் மட்டுமன்றி இன்ஸ்டாகிராம் மூலம் பலர் வியாபரமும் செய்து வருகின்றனர். இப்படி பலரும் பயன்படுத்தக்க்கூடிய இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் தற்போது ஒரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சம்
இன்ஸ்டாகிராம் புரொஃபைலில் பாடலை ஆட் செய்யும் புதிய அம்சத்தை தான் இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஸ்டோரி, போஸ்ட் மற்றும் நோட் ஆகிவற்றில் பாடல்களை ஆட் செய்யும் அம்சம் இருந்த நிலையில், தற்போது புரொஃபைலில் பாடல்களை ஆட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் ஒருவரின் புரொஃபைலை ஓபன் செய்யும்போது இந்த பாடல் அம்சம் தோன்றும். புரொஃபைலை ஓபன் செய்ததுமே இந்த பாடல் ப்ளே ஆகாது. மேனுவலாக ப்ளே செய்தால் மட்டுமே பாடல் ஓடும்.இன்ஸ்டாகிராம் புரொஃபைலில் பாடலை ஆட் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராம் புரொஃபைலில் பாடலை ஆட் செய்வதற்கு, முதலில் Edit Profile-க்கு செல்ல வேண்டும்.
பிறகு இன்ஸ்டாகிராமில் உள்ள பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்ந்தெடுக்கவும்.
அதிலிருந்து ஒரு 30 விநாடி பாடலை மற்றும் தேர்ந்தெடுத்து செட் செய்துக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட இந்த சிம்பிளான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்களால் இன்ஸ்டாகிராம் புரொஃபைலில் சுலபமாக பாடலை ஆட் செய்துக்கொள்ள முடியும். இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோட் அம்சத்தை பயன்படுத்தி பலரும் பாடல்களை பகிர்ந்து வரும் நிலையில், இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.