Homeதொழில்நுட்பம்மீண்டும் நல்ல நல்ல சலுகைகளை கொடுக்கும் ஜியோ! பி எஸ் என் எல் க்கு மாற...

மீண்டும் நல்ல நல்ல சலுகைகளை கொடுக்கும் ஜியோ! பி எஸ் என் எல் க்கு மாற வேண்டும் என்ற ஐடியா உங்களுக்கு இருந்தா இதை கொஞ்சம் பாருங்க.

Reliance Jio | இந்த ரூ.999 ப்ரீ பெய்டு பிளானுக்கு ஜியோ நிறுவனம் முன்பு 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.999 ப்ரீ பெய்டு பிளானுக்கு வெறும் 84
நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 98 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட முன்னணி தொலைத்ததொடர்பு நிறுவனங்கள் தங்களில் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு பிளான்களின் விலையை உயர்த்தின. இந்த திடீர் விலை உயர்வால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், BSNL தொலைத்தொடர்புக்கு தங்களது மொபைல் எண்களை மாற்றம் செய்து வருகின்றனர். ஏராளமாக மக்கள் தங்களது மொபைல் எண்ணை ஜியோவில் இருந்து BSNL மாற்ற விண்ணப்பித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவித்தன. இந்நிலையில் பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக தற்போது ஜியோ சில ஆஃபர்களை வழங்கி வருகிறது. அவை என்ன ஆஃபர்கள், அதில் என்ன பலன்கள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஜியோவின் மாற்றம் செய்யப்பட்ட ரூ.999 ப்ரீபெய்டு பிளான்
இந்த ரூ.999 ப்ரீ பெய்டு பிளானுக்கு ஜியோ நிறுவனம் முன்பு 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.999 ப்ரீ பெய்டு பிளானுக்கு வெறும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 98 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பு இருந்ததை விட 14 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ்
இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும். அதன்படி மொத்தம் 196 ஜிபி டேட்டா உங்களுக்குன் வழங்கப்படும். வழக்கம் போல அன்லிமிடெட் கால் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் இந்த பிளானிலும் வழங்கப்படுகிறது. அது தவிர இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி தளங்கள் அதிகம் பார்ப்பவர்களுக்காக ஜியோவின் ரூ.949 ப்ரீ பெய்டு பிளான்
கூடுதலாக இந்த பிளானில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகிவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் ஓடிடி தளங்கள் வேண்டும் என்றால் நீங்கள் ஜியோவின் ரூ.949 ப்ரீ பெய்டு பிளானில் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். இந்த பிளான் 84 நாட்களுக்கானதாகும். இந்த பிளானில் மொத்தம் 168 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழக்கம் போல அன்லிமிடெட் கால் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் இந்த பிளானிலும் வழங்கப்படுகிறது. இந்த பிளானின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு சந்தா வழங்கப்படுகிறது.

சற்று முன்