Homeதொழில்நுட்பம்ஜியோ வில் இருக்கும் எக்கச்சக்கை ரீசார்ஜ் ஆபர்கள்

ஜியோ வில் இருக்கும் எக்கச்சக்கை ரீசார்ஜ் ஆபர்கள்

ரூ.909 ரீசார்ஜ் திட்டத்துக்கு ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு ஆபர்களை அள்ளிவீசியுள்ளது.

ரூ.909 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.
புதிய ஜியோ ரீசார்ஜ் பேக் ஜி5 (Zee5), சோனிலைவ் (SonyLIV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ டிவி (JioTV) தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

மேலும், 5G கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G தரவு இணைப்பைப் பெறுவார்கள்.
ரூ.909 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ பேக் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் பிரபலமான ஒடிடி (OTT) பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

திட்டத்தின் சிறப்புகள்

விலை: ரூ. 909 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.
செல்லுபடி காலம்: 84 நாள்கள்
அழைப்புகள்: எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகள்.
எஸ்.எம்.எஸ் (SMS): ஒவ்வொரு நாளும் 100 குறுஞ்செய்தி.
டேட்டா: 2ஜிபி (168ஜிபி செல்லுபடியாகும்) அதிவேக தினசரி டேட்டா.
ஒடிடி (OTT): ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV), சோனிலைப் (SonyLIV) மற்றும் ஜி5 (Zee5).
முன்பு, ஜியோ தனது ரூ 808 ப்ரீபெய்ட் திட்டத்தை ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் செல்லுபடியாகும்.

டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு ஒரு இலவச சந்தாவை வழங்குகிறது. தொடர்ந்து, ரூ 758, ரூ 328, ரூ 331, ரூ 388, ஜியோ ரூ 598 மற்றும் ரூ 3178 உள்ளிட்ட பிற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்