Homeதொழில்நுட்பம்Lava yuva மொபைல் மிக மிக கம்மியான விலையில் 5ஜி வசதியோடு கிடைக்கிறது.

Lava yuva மொபைல் மிக மிக கம்மியான விலையில் 5ஜி வசதியோடு கிடைக்கிறது.

Lava Yuva 5G Smartphone: டூயல் சிம் லாவா யுவா 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. லாவா இரண்டு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு 14 க்கு மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. இது 269பிபிஐ பிக்சல் டென்சிட்சி மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெபிரஸ் ரேட்டுடன் 6.52-இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே (720×1,600 பிக்சல்கள்) கொண்டுள்ளது.

Lava Yuva 5ஜி ஸ்மார்ட்போன்: லாவா இன்டர்நேஷனல் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போனான லாவா யுவா 5ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே யூனிசாக் டி750 5ஜி சிப்செட்டை முதன்முறையாக இணைத்த ஸ்மார்ட்போன் இது ஆகும். மேலும், லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் 90ஹெட்ர்ட் ரெப்பிரஸ் ரேட்டுடன் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது, இரட்டை ரியர் கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் ப்ளூ மற்றும் மிஸ்டிக் கிரீன் வண்ணங்களில் கிடைக்கிறது. ஜூன் 5 முதல் அமேசான், லாவா இ-ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். இது ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. டூயல் சிம் லாவா யுவா 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. லாவா இரண்டு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு 14 க்கு மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. இது 269பிபிஐ பிக்சல் டென்சிட்சி மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெபிரஸ் ரேட்டுடன் 6.52-இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே (720×1,600 பிக்சல்கள்) கொண்டுள்ளது.

செல்ஃபி கேமரா
திரையில் 2.5டி வளைந்த கிளாஸ் மற்றும் பிரன்ட் கேமராவிற்கு மையமாக அமைந்துள்ள ஹோல்-பஞ்ச் ஆகியவை அடங்கும். 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் டி750 5ஜி எஸ்ஓசி- இல் ஃபோன் இயங்குகிறது. இது கூடுதல் ஸ்டோரேஜுடன் 8ஜிபி வரை விரிவாக்கப்படலாம். இரட்டை பின்புற கேமரா 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை ஷூட்டர் ஆகியவை கொண்டுள்ளது.

இது எல்இடி ஃபிளாஷ் மூலம் நிரப்பப்படுகிறது. செல்ஃபிக்களுக்கு, ஸ்கிரீன் ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ஸ்டோரேஜ் ஆப்ஷனில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்கக்கூடியது. இணைப்பு அம்சங்களில் 4ஜி வோல்ட், ப்ளூடூத் 5,ஜிபிஆர்எஸ், ஓடிஜி, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவையும் அடங்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது. லாவா யுவா 5ஜி இன் 5,000எம்ஏஎச் பேட்டரி 18வாட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒருமுறை சார்ஜிங்கிற்கு 28 மணிநேர டாக்டைமை வழங்குகிறது. லாவா யுவா 5ஜி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 499 ஆக உள்ளது. மேலும், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 ஆக உள்ளது.

சற்று முன்