Homeதொழில்நுட்பம்மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்தையில் சரிவை சந்திக்க என்ன காரணம்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்தையில் சரிவை சந்திக்க என்ன காரணம்?

மைக்ரோசாஃப்ட் Windows கோளாறு : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Windows இயங்குதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் கணினி பயன்பாடு ஸ்தம்பித்து போயுள்ளது. Windows பயன்படுத்தும் பயனர்களின் கணினி மற்றும் லேப்டாப்களில் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்” என காட்டுவதால் பயனர்கள் கணினி சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மைக்ரோசாஃப்டின் Crowdstrike – ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்னை எழுந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை முதல் மருத்துவ சேவை வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் பணி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Crowdstrike கோளாறால் சரிந்த பங்குகள்
மைன்க்ரோசாஃப்ட் Windows-ன் இந்த கோளாறால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், மைன்க்ரோசாஃப்ட் மற்றும் Crowdstrike நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் Windows அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகம் கடும் அவதிக்குள்ளாகியது. அதன்படி விமானம், போக்குவரத்து, தொழில்நுட்பம், மருத்துவ சேவை, வணிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக இந்த கோளாறு காரணமாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை கையில் எழுதி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு பல மணி நேரம் எடுத்ததால் விமான நிலையங்கள் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டன. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியது. இவ்வாறு மைக்ரோசாஃப்ட் Windows அனைத்து துறைகளையும் பாதித்த நிலையில், அதன் பங்குகள் குறைய தொடங்கியுள்ளன.

11% வரை குறைந்த Crowdstrike பங்குகள்
அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 1% சரிந்துள்ளன. இதேபோல Crowdstrike பங்குகள் சுமார் 11% வரை சரிந்துள்ளன. இன்று சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் Crowdstrike பங்குகளின் விலை 18.67% குறைந்தன. இதேபோல மைக்ரோசாஃப்ட் பங்குகள் விலை 2.5% வரை குறைந்தன. தற்போது Crowdstrike-ன் பங்குகள் 304.96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்ட் Windows கோளாறு
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த பிரச்னை தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய கட்டமைப்புகளை பாதித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு சரிந்துள்ள நிலையில், சிக்கல் சரிசெய்ய கால தாமதம் ஆகும் பட்சத்தில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறபப்டுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்