Homeதொழில்நுட்பம்Moto edge 30 ultra மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்.

Moto edge 30 ultra மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்.

Moto edge 30 ultra ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிறுவனமான மோட்டோரோலா, எலக்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் மோட்டோ என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் செல்போன்களுக்கு பெரிய சந்தையை கொண்டுள்ள மோட்டோ இந்தியாவிலும் ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்தது. இதன் விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் தொடங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.

Moto edge 30 ultra சிறப்பம்சங்கள் :

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா மாடலில் 6.67 இன்ச் pOLED FHD+ எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 144Hz புதுப்பித்தல் விகிதம் உள்ளளது. ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 200MP பிரைமரி கேமரா, 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் 50MP பிரைமரி கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 12MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 60MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குகிறது.

சற்று முன்