Homeதொழில்நுட்பம்திரும்பவும் வருது பட்டன் போன்! நோக்கியா அறிமுகப்படுத்தும் 3210 மாடல்.... இதன் விலை எவ்வளவு தெரியுமா?

திரும்பவும் வருது பட்டன் போன்! நோக்கியா அறிமுகப்படுத்தும் 3210 மாடல்…. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

90ஸ் காலகட்டத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஃபோன் தயாரிப்பு நிறுவனம் நோக்கியா. தற்போது பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. தனது பழைய மாடல் பட்டன் ஃபோன்களை புதிய டெக்னாலஜியுடன் தொடர்ந்து மறு அறிமுகம் செய்து வருகிறது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தெரியாத பெரியவர்களுக்கு இந்த வகை பட்டன் ஃபோன்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது இந்நிலையில் தற்போது 4ஜி தொழில்நுட்பத்துடன், UPI Payment, யூட்யூப் உள்ளிட்ட பல வசதிகளுடன் நோக்கியா தனது புதிய Nokia 3210 4G ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. யூனிசாக் டி107 சிப்செட், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 2.4 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே, டைப்-சி சார்ஜிங் போர்ட், 1,450mAh பேட்டரி, 2 மெகாபிக்சல் கேமரா, பில்ட்-இன் யுபிஐ பயன்பாடு, கிளவுட் ஆப்ஸ் மூலம் யூடியூப் போன்ற செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம்.1450 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த Nokia 3210 4G ஃபோன் யூஎஸ்பி டைப் சி சப்போர்ட் செய்கிறது.மேலும் யூட்யூப், யூபிஐ பேமண்ட் வசதிகளுடன் வெளியாகியுள்ளது இந்த Nokia 3210 4G. இந்த Nokia 3210 4G ஃபோன் ஸ்கூபா ப்ளூ, ஒய்2கே கோல்டு, க்ரஞ்ச் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

கிளாசிக் டி9 கீபோர்டு கொண்டுள்ளது. நோக்கியாவின் அடையாளங்களில் ஒன்றான ‘ஸ்நேக்’ கேமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஹெச்.எம்.டி நிறுவன வலைதளத்தில் நேரடியாக இந்த போனை பயனர்கள் வாங்கலாம்.

சற்று முன்