Mobile Updates : நடப்பாண்டின் தொடக்கத்தில் சீனாவில் ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி என்ற புதிய மாடல் போன் ஒன்று சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அதையொட்டிய சிறப்பம்சங்கள் நார்ட் 4-ல் இடம்பெருமன எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி-ல் 50 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், ஸ்நாப்டிராகன் 7+ ஜென் 3 எஸ்.ஒ.சி இயங்குதளத்துடன், 16ஜிபி ரம், 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகளுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஒன்ப்ளஸ் செல்போன்கள்: நார்ட் 4 மற்றும் நார்ட் சிஇ 4 லைட் ஆகிய ஸ்மார்ட் போன்கள் எப்போது வெளியாகுமென பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், இந்தியாவில் வரும் ஜூன் மாதம் இவை சந்தைக்கும் வருமென தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது கிடைத்திருக்கும் தகவலின் பேரில் நார்ட் 4-ல் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 7+ ஜென் 3 ப்ராஸசெர் கொண்டு இயங்குமெனவும், நார்ட் சிஇ 4 லைட் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 6 ஜென் 3 ப்ராஸசெர் மூலம் இயங்குமெனவும் கூறப்படுகிறது. குறிப்பாக நார்ட் சிஇ 4 லைட்-ல் ஒஎல்இடி டிஸ்பிளே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நடப்பாண்டின் தொடக்கத்தில் சீனாவில் ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி என்ற புதிய மாடல் போன் ஒன்று சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அதையொட்டிய சிறப்பம்சங்கள் நார்ட் 4-ல் இடம்பெருமன எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் ஏஸ் 3வி-ல் 50 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், ஸ்நாப்டிராகன் 7+ ஜென் 3 எஸ்.ஒ.சி இயங்குதளத்துடன், 16ஜிபி ரம், 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகளுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நார்ட் சிஇ 4 லைட் மாடல் 8 ஜிபி ரம்-உடன், 128 மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்களில், குவால்கோம் ஸ்நாப்டிராகன் 6 ஜென் 3 ப்ராஸசெருடன், 5500 mAh பேட்டரி திறன் கொண்டு, 67வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. ஒன்ப்ளஸ் நார்ட் 4 சுமார் ரூ. 25 ஆயிரத்திற்கும், நார்ட் சிஇ 4 லைட் ஏறத்தாழ ரூ. 20 ஆயிரத்திற்கு குறைவாகவும் விற்பனை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஒன்ப்ளஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே ஒன் பிளஸ் போட்டி நிறுவனமாக களமிறங்கிய நத்திங் அடுத்ட்தடுத்த்மாடலை ரிலீஸ் செய்கிறது. நத்திங் ஸ்மார்ட்போன் 2a ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 4nm மீடியா டெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ (MediaTek Dimensity 7200 Pro) சிப்செட், இரண்டு 50 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.
இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 உடன் அனுப்பப்படுகிறது. புதிய கேமரா அம்சங்கள், பொதுவான மேம்பாடுகள், பிழைத் திருத்தங்கள் மற்றும் கூகுளின் ஏப்ரல் பாதுகாப்பு இணைப்பு ஆகியவற்றுடன் நத்திங் ஓஎஸ் 2.5.5 புதுப்பிப்பை பெற்றுள்ளது. தற்போது, நத்திங் OS 2.5.5a புதுப்பிப்பு, ChatGPT ஒருங்கிணைப்பு மற்றும் பல புதிய அம்சங்களுடன் உலகளவில் ஃபோன் 2a பயனர்களுக்காக வெளிவருகிறது.இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நத்திங் OS 2.5.5a புதுப்பிப்பு Phone 2a பயனர்களுக்காக வெளிவருகிறது என்பதை எதுவும் உறுதிப்படுத்தவில்லை.இந்த சேஞ்ச்லாக்கில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்று சாட்ஜிபிடி (ChatGPT) ஒருங்கிணைப்பு ஆகும். அனைத்து அம்சங்களையும் அணுக, அவர்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து அவர்களின் ஃபோன் 2a கைபேசிகளில் சாட்ஜிபிடி பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பு பதிவிறக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
குறிப்பிடத்தக்க வகையில், Nothing Phone 2a சமீபத்தில் இந்தியாவில் மூன்றாவது நீல நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி உள்ளமைவுகளில் ரூ. 23,999, ரூ. 25,999, மற்றும் ரூ.27,999 ஆகிய விலைகளில் கிடைக்கிறது.