Homeதொழில்நுட்பம்OPPO Reno 10 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

OPPO Reno 10 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஓப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஒப்போ சீனாவின் டாங்குவான் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். ஸ்மார்ட்போன்களுக்கான இந்திய சந்தையில் ஓப்போ முன்னணியில் உள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வபோது புதிய ஸ்மாட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஓப்போ நிறுவனம், இந்திய சந்தையில் இன்று OPPO Reno 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் OPPO Reno 10, OPPO Reno 10 ப்ரோ OPPO Reno 10 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை, ரூ. 39,999 மற்றும் ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OPPO Reno 10 சீரீஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 13-ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஸ்டோர்களில் நடைபெற உள்ளது.

OPPO Reno 10 சீரிஸ் சிறப்பம்சங்கள்:

OPPO Reno ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. OPPO Reno சீரிசில் புகைப்படங்களை எடுக்க டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. OPPO Reno ப்ரோ பிளஸ் மாடலில் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பேட்டரியை பொருத்தவரை OPPO Reno 10 ப்ரோ பிளஸ் மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. OPPO Reno 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் சில்வரி கிரே மற்றும் கிளாசி பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

சற்று முன்