Homeதொழில்நுட்பம்புது அம்சங்களுடன் அறிமுகமாகும் போக்கோ F5!

புது அம்சங்களுடன் அறிமுகமாகும் போக்கோ F5!

போக்கோ F5 ஸ்மார்ட்போன்கள் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சீனாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் சியோமி ஆகும். போக்கோ ஸ்மாட்போன்கள் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது. கம்மியான விலையில், ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். இதேபோல் போக்கோ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், போக்கோ நிறுவனம் போக்கோ F5 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போக்கோ F5 5ஜி மற்றும் போக்கோ F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் வெளிவரவுள்ளன. போக்கோ F5 ஸ்மார்ட்போன்கள் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ F5 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. போக்கோ F5 மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், F5 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் 2K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இரு மாடல்களிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, F5 மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், F5 ப்ரோ மாடலில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

சற்று முன்