- Advertisement -
தொழில்நுட்பம்

போகோ f6 ஸ்மார்ட்f7 போன்கள் குறைந்த விலையில் அறிமுகம்.

Poco F6 smartphones: எஃப்6 அறிமுகத்திற்கு முன்னதாகவே, பிராசஸர், டிஸ்பிளே, கலர் ஆப்ஷன்ஸ் மற்றும் கேமரா விவரக்குறிப்புகள் உள்ளிட்ட சாதனத்தின் பல முக்கிய அம்சங்களை போகோ உறுதிப்படுத்தியது. அதன்படி, போகோ எஃப் 6 ஆனது 4 என்எம் செயல்முறையின் அடிப்படையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தொலைபேசியாகும்.

போகோ எஃப்.6 மே 29 அறிமுகம்: இந்தியாவில், போகோ எஃப்.6 (Poco F6) ஸ்னாப்டிராகன் 8 எஸ் ஜென் 3 சிப்செட், எல்பிடிடிஆர்5எக்ஸ்( LPDDR5x) ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் அறிமுகமாகி உள்ளது. இதனை, போகோ நிறுவனம் மே 23, 2024 இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எஃப்6 அறிமுகத்திற்கு முன்னதாகவே, பிராசஸர், டிஸ்பிளே, கலர் ஆப்ஷன்ஸ் மற்றும் கேமரா விவரக்குறிப்புகள் உள்ளிட்ட சாதனத்தின் பல முக்கிய அம்சங்களை போகோ உறுதிப்படுத்தியது. அதன்படி, போகோ எஃப் 6 ஆனது 4 என்எம் செயல்முறையின் அடிப்படையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தொலைபேசியாகும். இது, 1.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டுடு ( Antutu) மதிப்பெண்ணுடன் வருகிறது. ஃபோன் எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இது ஒரு புதிய போகோ ஐஸ்லூப் கூலிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது விசி கூலிங் சிஸ்டத்தை விட 3 மடங்கு சிறந்த முடிவுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. எஃப்6 ஆனது 1.5கே 120ஹெர்ட்ஸ் அமோல்ட் டிஸ்ப்ளே 2,400 நைட்ஸ் இன் உச்ச பிரகாசம் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது.
எச்டிஆர் 10+ மற்றும் டால்பி விஷன் க்கான சப்போட்டுடன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, போகோ எஃப் 6 ஆனது ஓஐஎஸ் உடன் 50எம்பி முதன்மை சென்சார் மற்றும் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

ஃபோன் 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 20எம்பி ஷூட்டருடன் முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு தொடர்பான அனைத்து தேவைகளையும் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் முன், போகோ எஃப் 6 சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் சியோமி இன் சமீபத்திய ஹைப்பர்ஓஎஸ் அவுட் ஆஃப் தி பாக்ஸில் இயங்கும்.

விலை
POCO F6 விலை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடலுக்கு ரூ.29,999ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
POCO F5 ஆனது 8GB/256GB மாடலுக்கு ரூ.29,999க்கும், 12GB/256GB மாடலுக்கு ரூ.33,999க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தவிர, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
POCO F6 மே 29 முதல் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று பட்டியல் உறுதிப்படுத்துகிறது.

- Advertisement -
Published by