Homeதொழில்நுட்பம்ரியல் மீ பி1 ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் அறிமுகம்.

ரியல் மீ பி1 ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் அறிமுகம்.

இந்தியாவில் 2024ல் ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், ரியல்மீ புதிய P-சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் கிடைக்கின்றன.
இந்தியாவில், ரியல் மீ பி.1 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ரியல்மீ தனது புதிய ரியல் மீ பி.1 5ஜி சீரிசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மாடல்கள் சிறந்த செயல்திறனை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. ரியல் மீ இன் பி.1 5ஜி சீரிசில் பி.1 5ஜி மற்றும் பி.1 5ஜி ப்ரோ ஆகிய இரண்டு வகைகள் உள்ளன.

பி. 1 சீரிஸ் வாடிக்கையாளர்களுக்கு வலுவான தேர்வாக மாறும் சாத்தியம் இருப்பதாக ரியல்மீ கருதுகிறது. ரியல் மீ இன் சமீபத்திய பி.1 5ஜி தொடரின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.

ரியல் மீ பி1 5ஜி, பி1 ப்ரோ 5ஜி யின் அம்சங்கள்

ரியல் மீ பி1 5ஜி மற்றும் ரியல் மீ பி1 ப்ரோ 5ஜி இரண்டும் 6.67-இன்ச் முழு எச்டி+ அமோல்ட் (AMOLED) டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள், 120Hz புதுப்பிப்பு வீதம், 240Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 2000 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது.

செயலாக்கத்தைப் பொறுத்தவரை, ரியல் மீ பி1 5ஜி ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7050 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு ஐக் கொண்டுள்ளது. இது அதன் அனைத்து கிராபிக்ஸ் தொடர்பான பணிகளையும் திறம்பட செய்கிறது.

மறுபுறம்,ரியல் மீ பி1 ப்ரோ 5ஜி ஆனதுஅட்ரினோ ஜி.பி.யு உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பி1 5ஜி தொடரின் இரண்டு பதிப்புகளும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 5.0 பதிப்புடன் வருகின்றன.

பி1 5ஜி சீரிஸ் 5,000 mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இதனால் ஃபோனை விரைவாக சார்ஜ் செய்கிறது.

இமேஜிங் திறனைப் பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50எம்பி சோனி எல்ஒய்டி600 முதன்மை சென்சார் மற்றும் 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் கேமராவுடன் வருகின்றன.

இருப்பினும், பி1 ப்ரோ 5ஜி மாடலில் கூடுதல் 8எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 16எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளன. இது பயனர்களின் அனைத்து செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு சிறப்பாக உள்ளது.

இந்தியாவில் ரியல்மீ பி1 5ஜி, பி1 ப்ரோ 5ஜி விலை

ரியல்மீ பி1 5ஜி ஆனது 6ஜிபி ரேம்/128ஜிபி வேரியன்ட் ரூ.15 ஆயிரத்து 999 விலையிலும், 8ஜிபி ரேம்/256ஜிபி ரூ.18 ஆயிரத்து 999 விலையிலும் கிடைக்கிறது.

ரியல்மீ பி1 5ஜி 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.21 ஆயிரத்து 999 மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.22 ஆயிரத்து 999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்