- Advertisement -
தொழில்நுட்பம்

மார்க்கெட்டில் புது அறிமுகம்! Redmi 12R ஸ்மார்ட் போன்.

Redmi 12R ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்மசங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

ரெட்மி மொபைல்ஸ் என்றாலே வாடிக்கையாளர்களின் நினைவுக்கு வருவது சீப் அண்ட் பெஸ்ட் மொபைல் தான். ரெட்மி என்பது சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் முதன்முதலில் ஜூலை 2013 இல் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. விலை குறைவாகவும், சிறப்பம்சங்கள் அதிகளவிலும் இருந்ததால் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன. நம்மால் கூட ஸ்மார்ட்போன்களை வாங்க முடியுமா என்று ஏங்கியவர்களுக்கு, ரெட்மி நிறுவனம் அந்த ஆசையை பூர்த்தி செய்தது. இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளன. அவ்வபோது புதுப்புது ஸ்மார்போன்களை அறிமுகம் செய்து வரும் ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ்-ஐ கொண்டுள்ளது. மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.79 இன்ச் ஃபுல் HD+ 2400×1080 பிக்சல் IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Published by