Homeதொழில்நுட்பம்புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது ரெட்மி 35 ஜி ஃபோன்கள்.

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது ரெட்மி 35 ஜி ஃபோன்கள்.

ஜியோமி நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனில் விலை ரூ.15,000-க்குள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்சல் சென்சார் உடன் கூடிய 108 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெக பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 13 5G ஸ்மார்ட்போன் : ஜியோமி நிறுவனம் பட்ஜெட் விலை கொண்ட தனது ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதனை முன்னிட்டு அந்த நிறுவனம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனில் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது போனுக்கு சிறந்த தோற்றத்தை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது. ரெட்மி 12 5G-ன் வெற்றியை தொடர்ந்து, 13 5G-க்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட 10 மாதங்களுக்கு பிறகு சிறந்த வடிவிலான ஸ்மார்ட்போனை ரூ.15,000-க்குள்ளான விலையில் அறிமுகப்படுத்துகிறது ஜியோமி.

ரெட்மி 13 5G-ன் சிறப்பு அம்சங்கள்
ரெட்மி 13 5G ஸ்மார்ட் போன் சிறந்த வெளி தோற்றம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. போனின் பின்பக்கத்தில் ரிங் லைட் உடன் கூடிய இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ரெட்மி 12 5G தோற்றத்தை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ரிங் லைட் அம்சம் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி 13 5G ஸ்மார்ட் போனில் 6.67 இன்ச் டிஸ்பிளே உள்ளது. அதுமட்டுமன்றி சிறந்த அனுபவத்திற்காக Punch – hole notch அம்சமும் உள்ளது.

Punch – hole notch-க்கு கொரிலா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.ரெட்மி 13 5G குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸரை கொண்டுள்ளது. இதே பிராசஸர் தான் ரெட்மி 12 5G ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ரெட்மி 13 5G ஸ்மார்ட் போனில் 2 மெகா பிக்சல் சென்சார் உடன் கூடிய 108 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 8 மெக பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமராவும் உள்ளது.

ரெட்மி 13 5G -ன் விலை எவ்வளவு இருக்கும்?
ரெட்மி 13 5G -ன் சரியான விலையைல் ஜியோமி இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் ரெட்மி 13 5G -ன் விலை ரூ.15,000-க்குள் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த போன் வரும் ஜூலை 9 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அமேசானில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜியோமி ரெட்மி 13 5G ஸ்மாட் போனை அதிக விலைக்கு அறிமுகம் செய்து, பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்களுக்காக குறிப்பிட்ட வங்கிகளுக்கு சலுகைகள் வழங்கவும் ஜியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் விலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்