Homeதொழில்நுட்பம்இந்திய இந்திய சந்தையில் அறிமுகமானது Samsung galaxy F34 5G

இந்திய இந்திய சந்தையில் அறிமுகமானது Samsung galaxy F34 5G

Samsung Galaxy F34 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டுள்ளது. அவ்வபோது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது, கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் வெளியாகவுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 18 ஆயிரத்து 999 ரூபாயாகவும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 20 ஆயிரத்து 999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.

Samsung Galaxy F34 5G சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 தொழில்நுட்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50MP கேமரா உட்பட மொத்தம் 3 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்ஃபி எடுப்பதற்காக 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டால்பி அட்மோஸ் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் என ஏராளமான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.

சற்று முன்