மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் மூலம் வாட்ஸ்அப்பில் சேட் ஃபில்ட்டரை வெளியிடுவதாக அறிவித்தார்.
வாட்ஸ்அப் சமூக ஊடகம், பயனர்கள் எளிதாக செய்திகளை அணுகும் வகையில், மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
வாட்ஸ்அப் புதிய சேட் ஃபில்ட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயன்பாட்டை மிகவும் வசதியாக மாற்றுகிறது.
குறிப்பிட்ட வகையான செய்திகளை பயனர்கள் எளிதாக அணுக உதவுகின்றன. வாட்ஸ்அப் சேட்பாக்ஸை இன்பாக்ஸாக உணர்பவர்களுக்கு இது மேலும் உதவியாக இருக்கும்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் மூலம் வாட்ஸ்அப்பில் சேட் ஃபில்ட்டரை வெளியிடுவதாக அறிவித்தார்.
முகநூல் பதிவில், “முக்கியமான செய்திகளை விரைவாகக் கண்டறிய உதவும் சேட் ஃபில்ட்டரை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் மூன்று ஃபில்ட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அரட்டைகளையும் மூன்று முக்கிய வகைகளாக பிரித்துள்ளது. அனைத்தும், படிக்காதது மற்றும் குழுக்கள்.
“வாட்ஸ்அப்பைத் திறந்து சரியான உரையாடலைக் கண்டறிவது விரைவான, தடையற்ற மற்றும் எளிமையானதாக உணர வேண்டும்.
மக்கள் வாட்ஸ்அப்பில் அதிகமாகச் செயல்படுவதால், உங்கள் செய்திகளை விரைவாகப் பெறுவது முன்பை விட அவசியமானது.
அதனால்தான் இன்று நாங்கள் புதிய சேட் ஃபில்ட்டரை அறிமுகப்படுத்துகிறோம். எனவே உங்கள் முழு இன்பாக்ஸை ஸ்க்ரோல் செய்யாமல் அதைச் செய்யலாம் ” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து மெசேஜ்கள்: உங்கள் எல்லா செய்திகளின் இயல்புநிலையில் பார்வையிடலாம்
படிக்காதது: பயனர்கள் இதுவரை படிக்காத உரையாடல்களை காண இந்த ஃபில்ட்டர் உதவுகிறது.
இது படிக்காததாகக் குறிக்கப்பட்ட அல்லது ஓபன் செய்யாத உரையாடல்களைக் காட்டுகிறது. இது பயனர்கள் தங்கள் பதில்களுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது.
குழு அரட்டைகள் :
இந்த ஃபில்ட்டரின் கீழ், அனைத்து குழு அரட்டைகளும் ஒன்றாக தொகுக்கப்படும். இது உங்களுக்குப் பிடித்தவற்றை எளிதாகக் கண்டறிய உதவும்.
எளிதாக அணுகுவதற்காக சமூகங்களின் துணைக்குழுக்களையும் இது காட்டுகிறது. “ஃபில்டர்கள் மக்கள் ஒழுங்கமைக்கப்படுவதை எளிதாக்கும் மற்றும் அவர்களின் மிக முக்கியமான உரையாடல்களைக் கண்டறிந்து செய்திகளை மிகவும் திறமையாக வழிநடத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மிக முக்கியமானவற்றில் நீங்கள் கவனம் செலுத்த நாங்கள் உங்களுக்கு கூடுதல் வசதிகளை உருவாக்குவோம்” என்று நிறுவனம் கூறியது.
இந்த அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கியுள்ளன. மேலும் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.