Homeதொழில்நுட்பம்ஒயர்லெஸ் சார்ஜிங், ஸ்பீக்கர் வசதியோடு ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்.

ஒயர்லெஸ் சார்ஜிங், ஸ்பீக்கர் வசதியோடு ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்.

Rizta Electric Scooter மற்றும் Halo எனும் அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது ATHER நிறுவனம்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஏதர் எனர்ஜி. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் ஏதர் எனர்ஜி தனது புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டை ஹாலோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரை முக ஹெல்மெட் மற்றும் முழு முக ஹெல்மெட் என அறிமுகப்படுத்தியுள்ளது. அரை முக ஹெல்மெட் விலை ரூ. 4,999, முழு முக ஹெல்மெட் ரூ. 12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏதர் எனர்ஜி ஹாலோவை பல புதிய அம்சங்களை கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த ஹெல்மெட்டுகள் ISI மற்றும் DOT- சான்றளிக்கப்பட்டவை . நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட காற்று துவாரங்கள் மற்றும் பாரம்பரிய ராட்செட் மெக்கானிசம் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்டில் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் உள்ளே ஓடும் மியூசிக் மற்றும் கால்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும்.

ரைடரும் பின்பக்கம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளும் வகையில், ஹெல்மெட் உள்ளேயே மைக்கும் அமைக்கப்பட்டு இதன் மூலம் ஹெல்மெட் அணிந்திருப்பவருக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வசதி அமைக்கப்ட்டுள்ளது

அதேசமயம் பாதுகாப்பு கருதி ஹாரன் சத்தம் உள்ளிட்ட சத்தங்கள் ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டை ஸ்கூட்டர் உள்ளே வைத்தால் தானாக சார்ஜாகி விடும் . இதன் பேட்டரி ஒரு வாரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஹெல்மெட்கள் Ather Chitchat எனப்படும் புதிய அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

சற்று முன்