டெலிகிராம் செயலி : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலிகளில் ஒன்றகா டெலிகிராம் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் செயலியை பெரும்பாலானோர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிரக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
டெலிகிராம் CEO அதிரடி கைது!
டெலிகிராம் செயலி மக்களிடம் இவ்வளவு பிரபலமாக உள்ள நிலையில், அதன் CEO பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செயலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது இந்தியாவில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெலிகிராம் செயலிக்கு பதிலாக இந்த செயலிகளை பயன்படுத்தலாம்
ஒருவேளை இந்திய அரசு டெலிகிராம் செயலியை தடை செய்துவிட்டால், அதற்கு பதிலாக நீங்கள் இந்த 5 செயலிகளை பயன்படுத்தலாம்.
சிக்னல் (Signal) :
உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்த கூடிய செயலிகளில் இதுவும் ஒன்று. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானதும் கூட. இந்த செயலி கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்ப்பட்டது. இந்த செயலியில் வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் வாட்ஸ்அப்பில் இருப்பது போல Disappearing அம்சமும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் (Whastapp) :
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி. வாட்ஸ்அப்பில், குருஞ்செய்திகள், வாய்ஸ் கால், வீடியோ கால், குழு உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இது மிகவும் பாதுகாப்பான சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் 2 பில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர்.
ப்ரோசிக்ஸ் (Brosix) :
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய குழு உரையாடல்களுக்கு சிறந்த செயலியாக ப்ரோசிக்ஸ் உள்ளது. இந்த செயலியில் குறுஞ்செய்தி, குறுஞ்செய்தி பேக்அப் மற்றும் ஹிஸ்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த செயலியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது. தொழில் சார்ந்த தகவல்களை ஊழியர்களுடன் பகிர்ந்துக்கொள்ள இது சிறந்த தேர்வாக இருக்கும்.
மேட்டர் மோஸ்ட் (Mattermost) :
டெலிகிராம் செயலிக்கு சிறந்த மாற்று செயலியாக மேட்டர் மோஸ்ட் இருக்கும். ஐடி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியில் பாதுகாப்பான மெசேஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft Teams) :
மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஒரு சிறந்த உரையாடல் தளமாக உள்ளது. இந்த செயலி மூலம் பயனர்கள் வீடியோ கால், ரியல் டைம் உரையாடல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பரிமாறிக்கொள்ள முடியும். தற்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்த மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.