Vivo X Fold 3 Pro: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை 5,700mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன்கள் சீனாவில் 9,999 யுவான் பணத்துக்கு கிடைக்கிறது. இந்தியப் பணத்துக்கு இது1.7 லட்சமாக இருக்கும். எனினும், இந்தியச் சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.1.5 லட்சத்துக்குள் விற்கப்படலாம் எனத் தெரிகிறது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஏ.ஐ ஸ்மார்ட்போன் : இந்திய செல்போன் சந்தையில் கடந்தாண்டு சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 5, ஒன்பிளஸ் ஓபன், ஓப்போ ஃபைன்டு என்2 பிளிப் உள்ளிட்ட பல்வேற மாடல்கள் அறிமுகமாகின. அந்த வகையில் இதேபோன்ற மடிக்கக் கூடிய அதேநேரத்தில் புதிய தொழில்நுட்பத்தில் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. இந்தப் பட்டியலில் விவோ தயார் நிலையில் உள்ளது. ஏனெனில், இந்தப் பிராண்ட் இன்னும் இந்தியாவில் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தவில்லை. இது தொடர்பான ஒரு டீசரில், விவோ அதன் மடிக்கக்கூடிய தொலைபேசியான விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஏ.ஐ திறன்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சரியான வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் வரலாம் என்று அறிக்கைகள் முன்னர் கூறியிருநதன. எனினும் உலகளாவிய மாறுபாடுகளுக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. இது குறித்து வெளியான அறிக்கைகளில் இந்த வகை ஸ்மார்ட்போன்கள், விவோவின் அறிமுக மாடல்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஸ்மார்ட்போனானது கையடக்க வசதியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சாதனம் டிஏ வி ரின்லாண்டு சோதனையையும் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த வகை ஸ்மார்ட்போன்கள் இரட்டை வகை காட்சிகளுடன் வருகின்றன.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் இலகுவாக உள்ளது. அதாவது, வெறும் 236 கிராம் எடையும், 14.98-கிராம் கார்பன் ஃபைபர் கீலுடன் வருகிறது. இந்த போன் மடிக்கும்போது 11.2 மிமீ தடிமன் கொண்டது. தொடர்ந்து, 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 சேமிப்பகத்தை வழங்க முடியும், இது மென்மையான மற்றும் திறமையான செயல்பாட்டை உறுதியளிக்கிறது.
இது மட்டுமின்றி புகைப்பட கலைஞர்கள் விரும்பும் வகையில் போனில் அதிநவீன கேமரா அமைப்பு உள்ளது. ஓ.ஐ.எஸ் (OIS) உடன் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-சென்சிங் முதன்மை கேமரா, 64-மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது.
செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை 5,700mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன்கள் சீனாவில் 9,999 யுவான் பணத்துக்கு கிடைக்கிறது. இந்தியப் பணத்துக்கு இது1.7 லட்சமாக இருக்கும். எனினும், இந்தியச் சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.1.5 லட்சத்துக்குள் விற்கப்படலாம் எனத் தெரிகிறது.