வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது என்பது, குறைந்த வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரி தாக்கல் செய்வதை இது எளிதாக்கிறது. அத்துடன் பலரும் அணுகக்கூடிய வழியில் மிகவும் எளிமையாகவும் இம்முறை உள்ளது. ITR 1 மற்றும் ITR 4 படிவங்கள் வாயிலாக வாட்ஸ் அப்பில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.
ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறையை துவங்குவதற்கு முன்பு ஒரு சில ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேன் கார்டு, ஆதார் அட்டை, பேங்க் ஸ்டேட்மெண்ட், PAN கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு குறித்த தகவல் படிவம் 16, டொனேஷன் செய்ததற்கான ரசீதுகள்.
ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பேமெண்ட் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள்,, ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட வட்டி சான்றிதழ்கள் மற்றும் புரோக்கர் பிளாட்ஃபார்மிடமிருந்து பெறப்பட்ட ஸ்டாக் டிரேடிங் ஸ்டேட்மெண்டுகள் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
‘Clear Tax’ எண்ணை ஷேவ் செய்து வாட்சப் வாயிலாக உரையாடலை துவங்க வேண்டும். முதலில் ‘ஹாய்’ என டைப் செய்து பின்னர் விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து ஆதார், பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை சமர்பிக்க போட்டோ அல்லது டாக்குமெண்ட் முறைகளை பயன்படுத்தலாம். ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4 படிவங்களை நிரப்புவதற்கு AI செயலியின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதனையடுத்து நிரப்பப்பட்ட படிவத்தை சரிபார்த்து, கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியானவை தான என்பது உறுதிப்படுத்தவும். வாட்ஸ்அப் வாயிலாக இந்த செயல்பாடுகளை பாதுகாப்பான கட்டணத்துடன் முடிக்கலாம். அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை எண்ணுடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி கிடைக்கும்.
இந்த வாட்ப் வாயிலாக ITR தாக்கல் செய்யும் நடைமுறை தமிழ், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கிறது. பயனர்கள் வாட்சப் வாயிலாகவே அனைத்து செயல்பாடுகளையும் நிறைவு செய்யலாம்.