Homeதொழில்நுட்பம்வாட்ஸ் அப்பில் ஷார்ட் ஃபில்டர் கண்டுபிடிப்பது எப்படி

வாட்ஸ் அப்பில் ஷார்ட் ஃபில்டர் கண்டுபிடிப்பது எப்படி

வாட்ஸ்அப் சாட் ஃபில்டர் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த வாட்ஸ்அப் அண்மை காலமாக பல்வேறு எளிதான அணுகுமுறை வசதிகளை வழங்கிவருகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலமாக பஸ் டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதை அனுமதிக்கும் வகையில் மெட்டா ஏ.ஐ சாட்பாட் போன்ற மற்றும் பல அம்சங்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உங்களுடைய மெசேஜ்களை வகைப்படுத்துவதை எளிதாக மாற்றும் வகையில் மற்றுமொரு அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வாட்ஸ்அப் அப்ளிகேஷனை மக்கள் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெசேஜ்களை முன்பை விட விரைவாக பெறுவது அவசியமாகிறது.

இதன் காரணமாக நாங்கள் இன்று சாட் ஃபில்டர்கள் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இனி உங்களுடைய முழு இன்பாக்ஸையும் நீங்கள் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது” எனத் தெரிவிக்கபபட்டு உள்ளது.
இதில், அன்ட்ரீடு (Unread) ஃபில்டர் என்பது பெயர் குறிப்பிடுவது போல இதுவரை நீங்கள் படிக்காத அல்லது பதில் அளிக்காத அல்லது unread என்று நீங்கள் குறித்து வைத்த சாட்களை காட்டும்.

தொடர்ந்து, குரூப் (Groups) ஃபில்டர் என்பது உங்களுடைய குரூப் சாட்கள் அனைத்தையும் காட்டக் கூடியது. இந்த வசதிகள் வரக் கூடிய நாள்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் ஏஐயின் முதல் அம்சம் அம்சம் கடந்த ஆண்டு மெட்டா கனெக்ட் 2023 நிகழ்வின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஏஐ யூசர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய அணுகல் மூலமாக இமெயில்களை வகைப்படுத்துவது போல உங்களுடைய சாட்களையும் இனி உங்களால் வகைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்