Homeதொழில்நுட்பம்இன்னும் கொஞ்ச நாளில் வாட்ஸ் அப் இந்தியாவில் செயல்படாதா?

இன்னும் கொஞ்ச நாளில் வாட்ஸ் அப் இந்தியாவில் செயல்படாதா?

என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேறுவோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிக்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ் அப் செயலி உள்ளது. இந்த வாட்ஸ் அப் செயலியை சுமார் 400 கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்தி வரும் சூழலில், இந்தியாவில் இருந்து வெளியேறுவோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கின் பின்னணி:
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய ஐடி விதியை இந்தியாவில் செயல்பட விரும்பும் சமூக வலைதள நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்தது.

இந்தி புதிய விதிமுறைக்கு எதிராக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உலகில் வேறு எங்கும் இதுபோன்ற விதி இல்லை. பிரேசிலில் கூட இல்லை. போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கு என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறை தான் காரணம். தவறான தகவல்களை பரப்பி, வன்முறையைத் தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைதளங்களுக்கு உள்ளது.

“இந்தியாவை விட்டு வெளியேறுவோம்”
குறிப்பிட்ட செய்தியை யார் அனுப்பியது என்பதை கண்டுபிடிக்க தான் மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்தது” என்றார். இதனை அடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்கள் என்க்ரிப்ஷனை முறையை உடைக்கச் சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்.

வாட்ஸ் அப்பை பொருத்தவரை தனியுரிமை தான் முக்கியம். என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறை இருப்பதால் தான் மக்கள் எங்களை நம்பி பயன்படுத்துகின்றனர்” என்றார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஒரு சமநிலை தேவை என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கர்நாடகா, சென்னை, கொல்கத்தா, கேரளா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த பிரச்சனை தொடர்பாக பல மனுக்கள் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்