வாட்ஸ்அப் தளத்தில் அடுத்து வரவுள்ள புதிய 5 அம்சங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
மெட்டாவின் வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. சேட் ஃபில்ட்டர், தனிப்பட்ட குறிப்புகள், சேனல் அப்டேட் என வாட்ஸ்அப்பில் புதிதாக வரவிருக்கும் 5 புதிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் மூலம் புதிய அப்டேட்கள் குறித்து அறிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) போன்ற வெளியீடுகள் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்புகளில் உள்ள புதிய அம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் ஐந்து புதிய வாட்ஸ்அப் அம்சங்களைப் பார்ப்போம்.
சேட் ஃபில்ட்டர்
மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பிற்கான சேட் ஃபில்டர்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.
இந்த ஃபில்டர்கள் சேட் லிஸ்ட்டிற்கு மேலே தோன்றும், பயனர்கள் தங்கள் உரையாடல்களை படிக்காத சேட்டுகள் மற்றும் குழுக்களின் மூலம் ஃபில்ட்டர் செய்யலாம். இந்த அம்சம் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளது. விரைவில் அனைவரையும் சென்றடையும் என்றார்.
தனிப்பட்ட குறிப்புகள்:
வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ படி, பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை தனிப்பட்ட முறையில் குறிப்பிட முடியும்.
பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுககளில் குறிப்பிட்ட தொடர்புகளைக் குறிப்பிடும் போதெல்லாம் மற்றவர்களுக்கு நேரடியாக அறிவிப்பை அனுப்பும்.
இந்த அம்சம் தொடர்புகளுக்கு இடையே வாட்ஸ்அப்பின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய அறிவிப்புகளைப் பெற விரும்பாதவர்களுக்கு தனிப்பட்ட குறிப்புகளை முடக்கும் திறனை வாட்ஸ்அப் சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
சேனல் அப்டேட் பதில்
சமீபத்திய ஐஓஎஸ் பீட்டா பதிப்பில், வாட்ஸ்அப் புதிய அம்சத்தில் சேனல் உரிமையாளர்கள் தங்கள் அப்டேட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதிக்கிறது.
சாரணமாக சேனல் உரிமையாளர்கள் தங்கள் சேனல் அப்டேட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதால், கடந்த காலத்தில் பகிரப்பட்ட குறிப்பிட்ட அப்டேட்டுகளை மேற்கோள் காட்ட வழி இல்லை.
இந்த அம்சம் சேனல் அப்டேட்டுகளை கிரியேட்டர்களுக்கான சிறந்த தகவல்தொடர்பு வடிவமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேனல்களை பின் செய்தல்
சேனல்களை பின் செய்யும் திறனை கொண்டு வர வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த சேனல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரிசையில் மேலே வைக்க முடியும். இது சேனலை எளிதாக அணுக அனுமதிக்கிறது.
இந்த அம்சம் முன்பு ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வேலை செய்வதில் காணப்பட்டது.