வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ, செயற்கை நுண்ணறிவு மூலம் புகைப்படங்களை எடிட் செய்யும் அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் மெட்டா ஏஐ-க்கு சென்று குறிப்பிட்ட பகுதிகளை எடிட் செய்வது அல்லது புகைப்படத்திற்கு பதில் அனுப்புவது என அனைத்தையும் இதன் மூலம் செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் ஏஐ : உலகில் இன்று பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் என்பதால் பலரும் அதை பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மட்டுமன்றி அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஊழியர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. எனவே பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் அவ்வப்போது சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் புகைப்படங்களை எடிட் செய்வது மற்றும் பதிலளிக்கும் அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
New Chat Button-ஐ அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்
இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில், வாட்ஸ்அப் தனது New chat button – ஐ அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுள்ளது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்களை ஏஐ வசதியுடன் எடிட் செய்துக்கொள்ள முடியும். புகைப்படங்களை மெட்டா ஏஐ-க்கு அனுப்பிய பிறகு, குறிப்பிட்ட பொருள் அல்லது தகவலை கேட்டு பெறலாம். அதுமட்டுமன்றி புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் அம்சமும் அதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள்
WABetainfo பகிர்ந்த தகவலின் படி, வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு முழு உரிமையையும் வழங்குகிறது. அதன்படி, பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் புகைப்படங்களை டெலிட் செய்துக்கொள்ள முடியும். இதற்கு முன்னதாக WABetainfo வெளியிட்ட தகவலில் மெட்டா ஏஐ-க்கு புகைப்படங்களை அனுப்பி எடிட் செய்வதற்கு பதிலாக ஏஐ புகைப்படங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
மெட்டா ஏஐ, பயனர்களை புகைப்படங்களை அனுப்புமாறு கேட்கும். பிறகு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், பயனர்களின் தோற்றத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை சோதிக்கும். இதேபோல பயனர்களும் தங்களுக்கு தேவைப்படும் போது செட்டிங்ஸ்க்கு சென்று புகைப்படத்தை டெலிட் செய்துக்கொள்ளலாம்.
மெட்டா ஏஐ உரையாடலில் Imagine Me என்பதை கிளிக் செய்தால், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உங்கள் புகைப்படம் கிடைக்கும். இதேபோல உரையாடல்களிலும் @Meta AI imagine me என்பதை டைப் செய்தால் செய்றகை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உங்கள் புகைப்படம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த அம்சம் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.