WhatsApp : வாட்ஸ்அப் அதன் செயலியில் புதிய தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் அப்டேட்டாகவும் பயன்படுத்த எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அதன் பயன்பாட்டிற்கான புதிய தோற்றத்தை ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) இல் அறிமுகப்படுத்துகிறது. புதுப்பிக்கப்பட்ட ஒளி பயன்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட டார்க் மோட், புதுப்பிக்கப்பட்ட லைட் மோட், புதிய கலர் ஸ்கீம் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐகான்கள் மற்றும் பட்டன்களை உள்ளடக்கிய புதிய வடிவமைப்பை வாட்ஸ்அப் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்துகிறது.
வாட்ஸ்அப் அதன் செயலியில் புதிய தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் அப்டேட்டாகவும் பயன்படுத்த எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களில் ஒன்று டார்க் மோடு. இது டெக்ஸ்ட் வாசிப்பை மேம்படுத்தியுள்ளது. லைட் மோட் கூடுதல் வெண்மையாக புதுப்பிக்கப்பட்டு, மேம்பட்ட பயன்பாட்டினை வழங்குகிறது.
கலர் ஸ்கீமைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப் அதன் பிராண்ட் அடையாளத்துடன் சீரமைக்க பச்சை நிறத்தின் புதிய ஷேடை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதன் வண்ணம் செம்மைபடுத்தப்பட்டுள்ளது.
ஐகான் மற்றும் பட்டனும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, முன்பு திரையின் மேற்புறத்தில் இருந்த நேவிகேசன் டேப் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் இப்போது கீழே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சேர்ச் பாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சேட் டேபிற்கு மேலே உள்ளது. குறிப்பிட்ட உரையாடல்கள் அல்லது செய்திகளைத் தேடும் பயனர்களுக்கு இது பயன்படும் வகையில் உள்ளது.
இந்த அப்டேட் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் படிப்படியாக வெளியிடப்படும். மேலும் இது ஆப்ஷனல் அல்ல, அதாவது பயனர்கள் இந்த மாற்றம் பெறுவதை தவிர்க்க முடியாது.
மாற்றங்கள் அனைத்து பயனர்களுக்கும் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கான ஆப்ஷனை உறுதிசெய்ய, செயலியை அப்டேட்டில் வைத்திருக்குமாறு வாட்ஸ்அப் அறிவுறுத்துகிறது.