Homeதொழில்நுட்பம்வாட்ஸ் அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்! எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ.

வாட்ஸ் அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்! எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ.

வாட்ஸ் அப் நிறுவனம் வீடியோ மெசேஜ் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.30 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம், வீடியோ மெசேஜ் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் Android மற்றும் iOS வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை போலவே, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம். குருஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை போலவே வீடியோ மெசேஜ் அம்சமும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் என்பது, அனுப்புனர் மற்றும் பெறுநருக்கு இடையே நடக்கும் உரையாடல். இதனை மூன்றாவது நபரால் பார்க்க முடியாது. இவ்வளவு ஏன் வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.

சற்று முன்