Homeதொழில்நுட்பம்வாட்ஸ் அப்பில் புதியதாக சேனல் கூட ஆரம்பிக்க முடியும். புதிய அம்சத்தை கொண்டு வந்திருக்கும் வாட்ஸ்...

வாட்ஸ் அப்பில் புதியதாக சேனல் கூட ஆரம்பிக்க முடியும். புதிய அம்சத்தை கொண்டு வந்திருக்கும் வாட்ஸ் அப்.

Channels என்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது

இந்த நிலையில், Channels என்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் பல்வேறு தரப்பினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் தளத்தின் மூலம் தங்கள் தொழிலை சந்தைப்படுத்தி வரும், நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் உள்ளடக்க தயாரிப்பாளர்கள் போன்ற பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் updates எனப்படும் புதிய டேபிற்கான அணுகலைப் பெறுவார்கள், அங்கு அவர்கள் பின்பற்றத் தேர்ந்தெடுத்த சேனல்களிலிருந்து புதுப்பிப்புகளைப் பார்க்க முடியும். இந்த updates உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான உரையாடல்களிலிருந்து வேறுபட்ட தகவலைக் காண்பிக்கும்.இந்த Channels அம்சம் “நிர்வாகிகளுக்கான ஒரு வழி ஒளிபரப்பு கருவி” ஆகும், இதன் மூலம் அவர்கள் செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகள் உட்பட எந்த வடிவத்திலும் தகவலை அனுப்பலா

சற்று முன்