Airtel Announcement ஏர்டெலின் விங்க் மியூசிக் செயலி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிடி மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு பிரதேயக சலுகைகளை வழங்குவதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
விங்க் மியூசிக் மூடல் : இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுபோக்கு அம்சங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. திரைப்படங்கள் பார்ப்பதற்கு, இசை மற்றும் பாடல்கள் கேட்பதற்கு என பல்வேறு செயலிகள் மற்றும் தளங்களும் உள்ளன. அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் ஏர்டலின் விங்க் மியூசிக் செயலி. தற்போது இந்த செயலி மூடப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெலின் விங்க் மியூசிக் செயலி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
ஏர்டெலின் விங்க் மியூசிக் செயலி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிடி மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குவதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர்டெல் பயனர்கள் ஆப்பிள் மியூசிக்குக்கான அணுகலை பெறுவார்கள். அதுமட்டுமன்றி விங்க் பிரீமியம் பயனர்கள் ஆப்பிள் மியூசிக்கிற்காக ஏர்டெல் வழங்கும் பிரத்யேக சலுகைகளை பெறுவார்கள் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விங்க் மியூசிக்கை ஆப்பிள் நிறுவனத்துடன் இணைத்த ஏர்டெல்
ஏர்டெலின் ஸ்ட்ரீமிங் சேவையான விங்க் மியூசிக் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த செயலி மூலம் பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பாடல்களை கேட்க்கலாம். ஆஃப்லைனில் பாடலை கேட்க விரும்பும் பயனர்கள் விங்க் மியூசிக் தளத்தில் இருந்து பாடலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வசதியும் இருந்தது. அதுமட்டுமன்றி காலர் டியூன் செட் செய்வதற்கும், பாட்காஸ்ட்களை கேட்கவும், பிராந்திய மொழிகளில் பாடலை ஸ்ட்ரீம் செய்யவும் இந்த செயலி அனுமதி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இணைப்பு மூலம் பயனாளர்களுக்கு என்ன என்ன சேவைகள் கிடைக்கும்
ஓடிடி மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளான ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றுக்கான பிரத்யேக சலுகைகளை வழங்குவதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் டிவி+ல் இருந்து பிரீமியம் ஏர்டெல் வைஃபை மற்றும் போஸ்பெய்டு திட்டங்களுடன் உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.