இந்திய கிரிக்கெட் அணையில் பாகுபலியாக விளங்கிய மகேந்திர சிங் தோனி இனி எந்த கேப்டனும் செய்ய முடியாதபடி பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய ஊரில் இருந்து வந்து, இந்திய கிரிக்கெட் அணியையே வழிநடத்தும் அளவுக்கு உயர்ந்தது என்றால் அவர் வாழ்க்கைக்கு பின் பல சொல்ல முடியாத பிரச்சனைகளை அவர் கடந்து வந்திருப்பார்.

தோனி எப்படி இந்திய அணிக்குள் வந்தார். அவர் வாழ்க்கையில் திருப்புமுனை எப்படி அமைந்தது என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷபா கரீம் கூறியுள்ளார்.

ரஞ்சிக்கோப்பையில் தன்னுடைய இரண்டாவது ஆண்டில் தோனி விளையாடி வந்தார். பீகார் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது நான் தோனியின் பேட்டிங்கை பார்த்தேன்.

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி எங்களின் கவனத்தை ஈர்த்தார். விக்கெட் கீப்பிங்கிளும் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் சில நுணுக்கங்களின் குறை இருந்தது.

இதனை அடுத்து நான் தோனியை அழைத்து சிலர் அறிவுரைகளை வழங்கினேன். விக்கெட் கீப்பிங் தோனி என்ன தவறு செய்கிறார் என்பதை நான் அவருக்கு உணர்த்தினேன்.

விக்கெட் கீப்பிங்கில் தோனி என்ன தவறு செய்கிறார் என்பதை நான் அவருக்கு உணர்த்தினேன். இது தோனியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங் இன்னும் பிரமிப்பாக இருந்தது. அவர் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக அவர் பாகிஸ்தான் மற்றும் கென்யாவுடன் முத்தரப்பு போட்டியில் விளையாடினார். அந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக சென்று விட்டதால் அந்த வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது.

அந்த தொடரிலும் தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அதிலிருந்து தோனியின் பெயர் அனைவருக்கும் தெரிய தொடங்கியது.

நான் கொல்கத்தாவில் இருந்த போது கங்குலியை அழைத்து தோனியை குறித்து பேசினேன். தோனியின் பேட்டிங்கை பார்த்து அவரை இந்திய அணி சேர்க்க வலியுறுத்தினேன்.

ஆனால் கங்குலியால் தோனி விளையாடுவதை பார்க்க முடியாமல் போனது. எனினும் அடுத்த சில நாட்களிலே தோனி இந்திய அணிக்குள் வந்தார் என்று சபாக்கரீம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு