- Advertisement -
Homeகிரிக்கெட்மூன்று மடங்கு உயர்த்தப்பட்ட சம்பளம், காற்றில் பரந்த பிசிசிஐ நெறிமுறை. எல்லாம் இதற்காக தானா?

மூன்று மடங்கு உயர்த்தப்பட்ட சம்பளம், காற்றில் பரந்த பிசிசிஐ நெறிமுறை. எல்லாம் இதற்காக தானா?

-Advertisement-

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தேர்வுக்குழு தலைவரை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் புதிய தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா பிரபல தொலைக்காட்சி நடத்திய ஒரு ஸ்டிங் ஆப்பரேஷனில் சிக்கியதால் தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனால் இடைக்கால தலைமை தேர்வாளராக இருந்த சிவசுந்தர் தாஸ் பதவியை விட்டு விரைவில் விலக உள்ள நிலையில் இப்போது புதிய தலைவராக அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விண்ணப்பிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.

ஆனால் அந்த பதவிக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளம் காரணமாக அவர் விண்ணப்பிக்கவில்லை என்று பின்பு சொல்லப்பட்டது. இந்நிலையில் புதிதாக பதவியை ஏற்றுள்ள அகர்கர், முன்பு சேத்தன் சர்மா வாங்கிய சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேத்தன் சர்மா தலைவராக இருந்த போது ஆண்டுக்கு ஒரு கோடியும், மற்ற தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆண்டுக்கு 90 லட்சமும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேபிடலஸ் அணியில் உதவி பயிற்சியாளராக ஏற்கனவே ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்து வந்த அகார்கர், சம்பள உயர்வுக்கான தனது கோரிக்கைகளை பிசிசிஐ யிடம் தெளிவாகக் கூறியிருந்தார் என சொல்லப்பட்டது.

-Advertisement-

அதனால் இப்போது திருத்தப்பட்ட சம்பளத்தில், அகர்கர் முன்னாள் தலைவர் பெற்றதை விட மூன்று மடங்காக  ஆண்டுக்கு மூன்று கோடி சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பள உயர்வு பற்றிய துல்லியமான விவரங்கள் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இதுபற்றி பிசிசிஐ அவர்களின் பொதுக்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம், தேர்வுக்குழுவு உறுப்பினர்கள் எப்போதும் ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்து ஒருவர் இருப்பர். ஏற்கனவே தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா வடக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர் என்பதால், அதே வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒருவர் தான் தேர்வுக்குழு தலைவராக வர வேண்டும் என்பது பிசிசிஐ கடைபிடிக்கும் நடைமுறை. ஆனால் மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த அஜீத் அகார்கர் தற்போது தேர்வுக்குழு தலைவராக வந்துள்ளார்.

இதன் மூலம் மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த இருவர் தெரிவுக்குழுவில் இடம்பெறுகின்றன. இதனால் மும்பைக்கு இது சாதகமாக அமையும் வாய்ப்புகள் உள்ளது. மும்பையை சேர்ந்த அதிகப்படியான வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறவும் இது வழிவகை செய்ய வாய்ப்புகள் உண்டு என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதோடு ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதிவுக்கு இது கூடுதல் பலத்தை சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த நட்சத்திரங்கள் யாரும் விண்ணப்பிக்காததால் தான் வடக்கும் பிராந்தியத்தை சேர்ந்த அகார்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படியோ மும்பை லாபியின் கை ஓங்காமல் இருந்தால் சரிதான்.

-Advertisement-

சற்று முன்