- Advertisement 3-
Homeவிளையாட்டுதிரும்ப டீம்க்கு வர ஆசையே இல்லையா.. ரஹானே பேட்டிங்கை பாத்து காண்டான ரசிகர்கள்..

திரும்ப டீம்க்கு வர ஆசையே இல்லையா.. ரஹானே பேட்டிங்கை பாத்து காண்டான ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கண்ட சிறந்த வீரர்களில் ஒருவர் தான் அஜிங்கியா ரஹானே. இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதிப்பதில் ரஹானேவுக்கு நிகர் அவர் மட்டும் தான். பலமுறை இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி தடுமாற்றம் கண்ட நிலையிலும் தனியாளாக மிகவும் நிதானமாக அடி ரன் சேர்த்து இந்திய அணிக்காக வெற்றியை தேடி தந்த முக்கிய பங்கையும் ரஹானே வகித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியை தலைமை தாங்கியதுடன் பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வென்றதிலும் ரஹானே பங்கு அதிகம். இப்படி பல சிறப்பான சம்பவங்கள் ரஹானே பக்கம் இருந்த போதிலும் ஒரு சில டெஸ்ட் தொடர் போட்டிகளில் சிறப்பாக அவர் ஆடத் தவறி விட்டார். இதனால் இளம் வீரர்கள் அதிகம் டெஸ்ட் அணியில் நுழைய தொடங்கிய சூழலில் ரஹானேவுக்கான இடமும் இந்திய அணியில் குறைந்து போனது.

ஒரு பக்கம் அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு வழங்க வேண்டும் என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, சமீபத்தில் ஆரம்பமான ரஞ்சித் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ரஹானே நிச்சயம் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதே போல சமீபத்தில் பேசி இருந்த ரஹானே, இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது தான் தன்னுடைய நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் அடியுள்ள ரஹானே நிச்சயம் ரஞ்சித் தொடரில் தனது நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் ஆட வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பினர்.

- Advertisement 2-

ஆனால் ஆந்திர பிரதேஷ் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற போதிலும் அந்த அணியின் கேப்டன் ரஹானே கோல்டன் டக்கானார். இதனைத் தொடர்ந்து கேரளா அணிக்கு எதிராக மும்பை அணி தற்போது மோதி வரும் ரஞ்சி போட்டியிலும் முதல் பந்தியிலேயே மீண்டும் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் ரஹானே.

இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆடுவதே தனது லட்சியம் என ரஹானே குறிப்பிட்ட நிலையில் இப்படி மோசமாக ஆடினால் எப்படி இந்திய அணிக்காக தேர்வாக முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஹானே இப்படியே தொடர்ந்து ஆடினால் நிச்சயம் அதன் பின்னர் வரும் டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியில் அவர் இடம்பெற முடியாது என்பது தான் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

சற்று முன்