- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் சிறப்பா பந்து வீச காரணமே பும்ரா தான்.. அவரு குடுத்த அந்த ஐடியா.. உற்சாகத்தில்...

நான் சிறப்பா பந்து வீச காரணமே பும்ரா தான்.. அவரு குடுத்த அந்த ஐடியா.. உற்சாகத்தில் அர்ஷ்தீப்..

- Advertisement 1-

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை போட்டிகளின் அனைத்து போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் தான் அதிகம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இங்குள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க தடுமாற்றத்தை கொடுத்து வருவதுடன் மட்டுமில்லாமல் 100 க்கும் மேற்பட்ட இலக்கை தொடுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

தென்னாபிரிக்க அணி 113 ரன்கள் அடித்து இதே மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல இந்திய அணியும் 119 ரன்கள் அடித்தும் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இப்படி குறைந்த ஸ்கோர் போட்டிகளே அதிகம் விறுவிறுப்பாக அமைந்து வரும் சூழலில் தான் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சமீபத்தில் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணியை பொறுத்தவரையில் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை காலி செய்து குடைச்சல் கொடுத்திருந்தார் அர்ஷ்தீப் சிங். இதன் பின்னர் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 110 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.

பாகிஸ்தானை வீழ்த்தி இருந்த அமெரிக்க அணி இந்த இலக்கை கொண்டும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அப்படி ஒரு ஆட்டம் தான் முதல் மூன்று ஓவரில் அரங்கேறி இருந்தது. சௌரப் நெட்ராவல்கர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர்.

- Advertisement 2-

ஆனால் இதிலிருந்து சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே அணியை மீட்டெடுக்க 19 ஓவரில் இலக்கை எட்டியதுடன் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி இருந்தது. இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த அர்ஷதீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

ஆட்டநாயகன் விருது பெற வென்ற பின் பேசியிருந்த அவர், “எனது பர்ஃபார்மென்ஸை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் கொஞ்சம் ரன்களை அதிகம் கொடுத்து இருந்ததால் நான் பெரிய அளவில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் இந்திய அணி என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பும் கொடுத்தது.

இதனால் அவர்களுக்கான நன்றிக்கடனை திரும்ப செய்து முடித்தேன். வேகப்பந்து வீச்சுக்கு பிட்ச் அதிக சாதகமாக இருந்ததால் எளிமையான திட்டத்தை வைத்து அதனை செயல்படுத்த நினைத்தேன். மிகவும் ஈஸியான பந்தாக இருக்கக் கூடாது என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு அதற்கேற்ப பந்து வீசி இருந்தோம்.

பும்ரா தான் எனக்கு சிறப்பாக பந்து வீசும் ஆலோசனைகளை கொடுத்து பக்கபலமாக இருந்தார். அனைத்து பந்து வீச்சாளர்களுமே சிறப்பாக செயல்பட இனிவரும் போட்டிகளிலும் அதையே செய்ய நினைத்துள்ளோம்” என அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

சற்று முன்