- Advertisement 3-
Homeவிளையாட்டுஇது தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் இது தான். நான் என்...

இது தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் இது தான். நான் என் மனைவியிடம் சொன்னது இப்படி தான் – அஸ்வின் பேச்சு

- Advertisement 1-

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் எடுக்கப்படாதது பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளது. கவாஸ்கர், சச்சின் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் அந்த முடிவை தவறானது என விமர்சித்துள்ளனர்.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருக்கும் ஒருவரை எப்படி பென்ச்சில் உட்கார வைக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அஸ்வின் பவுலர் மட்டும் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் 5 முறை சதமடித்து பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்தவர்.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய மூட்டு பிரச்சனை, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, ஆஸிக்கு எதிரான போட்டியில் தன்னை அணியில் எடுக்காதது என பலவற்றைக் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் அணிக்காக என்ன செய்துள்ளேனோ, அதற்காக பெருமைப் படுகிறேன். நான் விக்கெட்களை எடுத்ததற்காகவோ அல்லது ரன்களை சேர்த்ததற்காகவோ இதை சொல்லவில்லை. தொடர்ந்து சீராக அணிக்காக நான் விளையாடியுள்ளேன். வயதாகும் போது எல்லா கிரிக்கெட் வீரர்களும் பாதுகாப்பின்மையை உணர்வார்கள்.  நீங்கள் எதையாவது கெட்டியாக பிடித்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement 2-

மேலும் கிரிக்கெட்டில் தனது ரிட்டையர்மெண்ட் குறித்து “நான் பங்களாதேஷில் இருந்து திரும்பி வந்த போது,  என்னுடைய மனைவியிடம் ஆஸ்திரேலியா தொடர்தான் (சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை) என்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்று கூறியிருந்தேன். எனக்கு சில மூட்டுவலி பிரச்சனைகள் உள்ளன. நான் என்னுடைய பவுலிங் ஆக்‌ஷனை மாற்றப் போவதாகவும் அவரிடம் கூறினேன்.  நான் பந்தை வீசும் போது எனது மூட்டுகளில் வலி இருந்தது. அதனால் என்னுடைய பந்துவீச்சில் நான் முழு திருப்தி அடையவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்திய அணிக்கு கேப்டனாக போகிறாரா ரஹானே? ரோகித்துக்கு ரெஸ்ட், அணியிலும் பல மாற்றங்களாம்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடாதது குறித்து பேசிய அவர் “ போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவே எனக்கு நான் விளையாட போவதில்லை என்பது தெரியும். அதனால் நான் என்னால் முடிந்த அளவுக்கு வீரர்களுக்கு உதவ விரும்பினேன்.  எப்படியாவது அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். ஏனென்றால் அணி இந்த நிலைக்கு வருவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்