- Advertisement 3-
Homeவிளையாட்டுஎங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. சைலண்டாக இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலிய அணி..

எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. சைலண்டாக இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலிய அணி..

- Advertisement 1-

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அணி என்றால் நிச்சயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தான். கடந்த ஜூன் மாதம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை சொந்தமாக்கி இருந்தது.

இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்ட ஒரே அணியான இந்தியா, இரண்டு முறையும் ஐசிசி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பையும் தவற விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தான் மோதி இருந்தது.

இந்த முறை இந்தியாவில் உலக கோப்பைத் தொடர் நடைபெற்ற பட்சத்தில் பல சாதகங்களான விஷயமும் இந்திய அணியின் பக்கம் இருந்தது. அதே போல, ஒரு தோல்வியை கூட பெறாமல் 10 வெற்றிகளுடனும் அவர்கள் இறுதி போட்டிக்கு முன்னேற அங்கேயும் அவர்களின் கனவை சின்னாபின்னமாக்கியது ஆஸ்திரேலிய அணி.

கடந்த சில ஆண்டுகளாகவே பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருந்த போதிலும் ஐசிசி கோப்பைக்கு சொந்தக்காரர் ஆகும் பாக்கியம் அவர்களுக்கு கைகூடவில்லை. அதனை கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டு முறை கெடுத்த அணி என்றால் ஆஸ்திரேலியா தான். இந்த நிலையில், மீண்டும் ஒரு முறை இந்திய ரசிகர்களின் கடுப்பை ஏற்றி விட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

- Advertisement 2-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதி இருந்த .இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்திருந்தது. முதல் போட்டியில் படு தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை துண்டு துண்டாக்கி ஒன்றரை நாளிலேயே டெஸ்ட் போட்டியையும் முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் முதலிடமும் பிடித்திருந்தது.

இன்னொரு பக்கம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் இடத்தை இந்தியா பிடித்திருந்த நிலையில், தற்போது அதில் ஒன்றிற்கு ஆப்பு வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஏற்கனவே வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி டெஸ்டை வெல்லும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

அப்படி இருக்கையில், டெஸ்டில் நம்பர் 1 அணியாக இருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது ஆஸ்திரேலியா. இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி 25 ஆம் தேதி தான் ஆரம்பமாகிறது. இதனால், ஆஸ்திரேலிய அணி தான் அதுவரை முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்