- Advertisement 3-
Homeவிளையாட்டுஒண்ணா போலாம்.. உயிர் கொடுத்து ஆடிய இங்கிலாந்தை.. அலேக்கா சூப்பர் 8 கொண்டு போன ஆஸ்திரேலியா.....

ஒண்ணா போலாம்.. உயிர் கொடுத்து ஆடிய இங்கிலாந்தை.. அலேக்கா சூப்பர் 8 கொண்டு போன ஆஸ்திரேலியா.. காரணம் என்ன?..

- Advertisement 1-

டி20 உலக கோப்பைத் தொடரில் பல போட்டிகள் மிக சாதாரணமாக நடந்திருந்தாலும் ஒரு சில போட்டிகளின் முடிவு ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையிலான ஒரு போட்டியாக தான் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி இருந்த போட்டி அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தது. இதில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் ஆடி 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

ஸ்காட்லாந்து அணியும் மூன்று போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற்றால் இங்கிலாந்தை வெளியே அனுப்பிவிட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற வாய்ப்பும் இருந்தது.

முன்னதாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியை பற்றி ஆஸ்திரேலியாவின் வீரர்களான ஹேசல்வுட் உள்ளிட்ட சிலர் வேண்டுமென்றே ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைவோம் என்பது போல இங்கிலாந்தை அணியை வெளியேற்றும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி வெளியேறுமா அல்லது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற குழப்பத்திலேயே தான் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி ஆரம்பமானது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளித்து 180 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அதே வேலையில் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 1 ரன்னிலும், மிட்செல் மார்ச் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் நடையை கட்ட அந்த அணி 60 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

- Advertisement 2-

அதுமட்டுமில்லாமல் மேற்கொண்டு ரன் சேர்க்கவும் அவர்கள் திணறி வந்த சூழலில் ஹெட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். கடைசி ஆறு ஓவர்களில் ஏறக்குறைய 70 ரன்கள் வரை தேவைப்பட்ட போதிலும் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டியதால் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு, அதிகமாக இருந்தது.

29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் அவுட்டாக, ஹெட்டும் 68 ரன்களில் அவுட்டாகி இருந்தார். இதனால் இறுதிக்கட்டத்தில் 14 பந்துகளில் 14 ரன்கள் வேண்டும் என்று இருக்க, ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டனர். மேலும் கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் வேண்டும் என பரபரப்பான சூழலும் உருவாகி இருந்தது.

அப்போது இரண்டு பந்துகளை மீதம் வைத்து ஆஸ்திரேலியா அணி இலக்கை எட்டிப் பிடிக்க இங்கிலாந்து அணியின் சூப்பர்8 வாய்ய்பும் உறுதியானது. ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றுவிடுமோ என்ற பயம் இருந்தாலும் தங்களுக்கு பரம எதிரிகள் போல கிரிக்கெட்டில் இருக்கும் இங்கிலாந்து அணியையும் சேர்த்து அவர்கள் சூப்பர்8 சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்