- Advertisement 3-
Homeவிளையாட்டுஜட்டு கூட பேசுன அந்த 15 நிமிஷம்.. ஆஸி. இளம் வீரரின் கிரிக்கெட் பயணத்தை புரட்டி...

ஜட்டு கூட பேசுன அந்த 15 நிமிஷம்.. ஆஸி. இளம் வீரரின் கிரிக்கெட் பயணத்தை புரட்டி போட்ட ரவீந்திர ஜடேஜா..

- Advertisement 1-

இந்திய அணி கண்ட சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. இளம் வயதில் இந்திய அணிக்காக ஆடி வரும் ஜடேஜா, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த உலக கோப்பைத் தொடரில், பேட்டிங்கில் அதிகம் ஜொலிக்கவில்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு பல முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதே போல, டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் சூழலை எத்தனை பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் சமாளித்து ஆடுவது மிகவும் கடினமான காரியம் தான். தொடர்ந்து, அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஜடேஜா முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜடேஜாவால் தனது கிரிக்கெட் பயணம் மாறியதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேத்யூ குஹ்னமேன் தெரிவித்துள்ளார்.

முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள மேத்யூ குஹ்னமேனுக்கு சர்வதேச போட்டிகளில் மிக குறைந்த வாய்ப்பு மட்டுமே.கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேத்யூ குஹ்னமேன் ஆடியிருந்த சூழலில், முதல் இன்னிங்ஸிலேயே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருந்தார்.

ஆனாலும், இதன் பிறகு அவருக்கான வாய்ப்பு சர்வதேச அணியில் அதிகம் கிடைக்கவில்லை. கவுண்டி போட்டிகளில் அதிகம் பங்கெடுத்து ஆடி வரும் மேத்யூ குஹ்னமேன், தற்போது ஆரம்பித்துள்ள பிக்பேஷ் லீக்கிலும் ஆட உள்ளார். இந்த நிலையில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவால் தனது கிரிக்கெட் பயணத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து மேத்யூ குஹ்னமேன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“இந்திய அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த சமயத்தில் ஜடேஜாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு சில சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். அவை சிறப்பாக இருந்த சூழலில், அதனை நான் அடுத்து நடந்த கவுண்டி தொடரில் செயல்படுத்தி பார்த்தேன். அப்போது ஜடேஜா கொடுத்த ஆலோசனைகள் அதிகம் கை கொடுத்தது.

இதனால், அந்த ஐடியாக்களை பிக் பேஷ் லீக்கிலும் செயல்படுத்தி அதில் வெற்றிகளை காண்பேன் என நம்புகிறேன்” என மேத்யூ குஹ்னமேன் கூறி உள்ளார். ஜடேஜா கொடுத்த சிறப்பான பந்து வீச்சு ஐடியாக்களைக் கொண்டு ஒரு இளம் வீரர் தனது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ள சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சற்று முன்