- Advertisement -
Homeகிரிக்கெட்கேள்விக்குறியாகும் கோலி மற்றும் ரோஹித்தின் இடங்கள். விரைவில் பிசிசிஐ அவர்களை அழைத்து பேச இருப்பதாக தகவல்

கேள்விக்குறியாகும் கோலி மற்றும் ரோஹித்தின் இடங்கள். விரைவில் பிசிசிஐ அவர்களை அழைத்து பேச இருப்பதாக தகவல்

-Advertisement-

இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும், கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி20 அணியில் இடம்பெறவில்லை. டி20 அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த தொடரில் ரோஹித் சர்மா எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விளையாடவில்லை. ஆனால் கோலி, அந்த தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருந்தார்.

அதே போல ஐபிஎல் தொடரிலும் கோலி அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் ஒருவராக இருக்க, ரோஹித் ஷர்மாவோ ஐபிஎல் தொடரிலும் ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் அதற்கான டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இப்போது அவர்கள் டி20 அணியில் இடம்பெற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்களின் இடம் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அடுத்தடுத்து டி20 போட்டிகள் நடக்க உள்ள நிலையில் மீண்டும் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-Advertisement-

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 2023, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரிடம் அவர்களின் டி20 எதிர்காலம் பற்றி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்சைட் ஸ்போர்ட்ஸ் தளத்திடம் பேசும்போது “புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக்குழு தலைவரின் பணிகளில் ஒன்று வீரர்களிடம் அவர்களின் எதிர்காலம் பற்றி பேசுவதாக இருக்கும். அதில் கோலி மற்றும் ரோஹித் முதன்மை இடத்தில் இருப்பார்கள். அவர்கள் விரும்பும்வரை விளையாடவே நாங்களும் விரும்புகிறோம். ஆனால் எல்லா சிறந்த வீரர்களும் தங்களின் எதிர்கால திட்டம் பற்றி யோசிக்கவேண்டிய நேரம் இருக்கிறது. மூன்று வடிவிலான போட்டிகளில் விளையாடி, ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது எளிதானது இல்லை” என அவர் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்