- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே-ல என்னுடைய நேரம் இப்படி தான் இருந்தது. தோனி கூட விளையாடறது எனக்கு ஒன்னும் புதுசு...

சிஎஸ்கே-ல என்னுடைய நேரம் இப்படி தான் இருந்தது. தோனி கூட விளையாடறது எனக்கு ஒன்னும் புதுசு இல்ல. சிஎஸ்கே அனுபவம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ்

- Advertisement 1-

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ரூ. 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இந்த சீசனில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒரு மாதத்திற்கும் மேலாக காயத்தால் ஓய்வுபெற்று வந்த அவர் இப்போது சர்வதேச போட்டிகள் காரணமாக இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

இந்த ஆண்டு அவரால் அணிக்கு பெரிய நன்மைகள் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அவர் சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை நிரப்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடியது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,

“ஐபிஎல்-க்குள் சிஎஸ்கே அணியின் வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் புனே அணிக்காக எனது முதல் ஆண்டில் விளையாடிய போது சிஎஸ்கே அணியின் பல சப்போர்ட் ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளருடன்(பிளமிங்) பணிபுரிந்தேன். அதனால் நான் திரும்பி சிஎஸ்கே அணிக்கு வந்து இவர்களுடன் மீண்டும் விளையாட ஆவலாக இருந்தேன்.

நான் சிஎஸ்கே-வில் எனது நேரத்தை மிகவும் ரசித்தேன், மேலும் தோனியுடன் மீண்டும் இருப்பது மற்றொரு அற்புதமான விஷயம் மற்றும் மொயீனும் இங்கே இருப்பது சிறப்பான ஒன்று. எனவே நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தோனி எப்படி விளையாடுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.

- Advertisement 2-

அவர் ஒரு அழகான குளிர்ச்சியான சூழலை அணிக்குள் உருவாக்க விரும்புகிறார். ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யட்டும் என நினைப்பவர் அவர். சென்னை மைதானம் விளையாடுவதற்கு மிகவும் சிறப்பான இடமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். முதல்முறையாக சென்னை ஜெர்சியுடன் வெளியே நடப்பது சிறப்பான தருணம்.

இதையும் படிக்கலாமே: 4 நாட்களில் களத்தில் 75 ஓவர்கள் நின்றுள்ளார். எஸ் கோலிக்கு இஞ்சூரி இருக்கு. ஆனா அதன் நிலை என்ன? – ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சொன்ன தகவல்

உங்கள் அணியில் உங்களுக்கு தோனி இருந்தால், நீங்கள் பிற அணிகளின் மைதானங்களில் விளையாடினால் கூட  உங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற ஆதரவு கிடைக்கும்.” எனக் கூறியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் நிச்சயம் அடுத்த சீசனில் தனது பங்கை சென்னை அணிக்காக சிறப்பாக அளிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்