- Advertisement 3-
Homeவிளையாட்டுசமாளிக்க முடியாமல் தடுமாறிய கீழே விழுந்து அவுட் ஆன பட்லர்.. புவியின் மாயாஜால யார்க்கர்

சமாளிக்க முடியாமல் தடுமாறிய கீழே விழுந்து அவுட் ஆன பட்லர்.. புவியின் மாயாஜால யார்க்கர்

- Advertisement 1-

நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி கடைசி பந்து த்ரில்லராக பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி, 59 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.

இந்த இன்னிங்ஸில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பவுலர்கள் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், கடைசி ஓவர்களில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். அதிலும் 18 ஆவது ஓவரை வீசிய நடராஜனும், 19 ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரும் முறையே 5 மற்றும் 7 ரன்களையே கொடுத்தனர். அதிலும் 19 ஆவது ஓவரில் சதமடிக்கக் காத்திருந்த ஜோஸ் பட்லரின் விக்கெட்டை அபாரமான ஒரு யார்க்கரால் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

19 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தாக புவனேஷ்வர் வீசிய யார்க்கரை சமாளிக்க முடியாமல் தனது காலில் வாங்கி தடுமாறி கீழே விழுந்தார் ஜோஸ் பட்லர். உடனடியாக எல் பி டபுள் யூ விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார் பூவி. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. உடனடியாக கொஞ்சம் கூட யோசிக்காமல் கேப்டனைக் கூட ஆலோசிக்காமல் உடனடியாக டி ஆர் எஸ் கேட்டார். மூன்றாம் நடுவரின் ரிப்ளையில் பந்து லெக் ஸ்டம்ப்பை தட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பட்லர் அவுட் என அறிவிக்கப்பட்டார். இதனால் சதத்தை 5 ரன்களில் இழந்தார் அவர். இந்த விக்கெட் சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் பாருங்க: சிம்பிள் ரன் அவுட்டை கோட்டை விட்ட சஞ்சு சாம்சன். இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! – வீடியோ

- Advertisement 2-

இதையடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அதிரடியாக விளையாடி, ரன்களைக் குவித்து இலக்கை நோக்கி சென்றது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால், ராஜஸ்தான் கை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே சென்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் க்ளன் பிலிப்ஸ் சர்பரைஸாக ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஊட்டினார். ஆனால் அதே ஓவரில் அவர் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் கடைசி ஓவரில் அப்துல் சமத் உதவியால் 17 ரன்களை விளாசி அணியை வெற்றிவாகை சூடவைத்தார்.

சற்று முன்